எம்ஜிஆருக்கு பிடித்த பாடல் வரிகள்.. மேடையில் நெகிழ்ந்த மயில்சாமியின் வீடியோ!

சென்னை : நடிகர் மயில்சாமி நேற்றைய தினம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மயில்சாமியின் உடலுக்கு நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே இன்றைய தினம் மயில்சாமியின் உடல் வடபழனியில் உள்ள ஏவிஎம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

நடிகர் மயில்சாமி

நடிகர் மயில்சாமி

நடிகர் மயில்சாமி தாவணி கனவுகள் படத்தில் துவங்கிய தன்னுடைய திரைப்பயணத்தை தற்போதுவரை தொடர்ந்து வந்துள்ளார். காமெடி முதல் குணச்சித்திரம் வரை அவரது படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். வடிவேலு, விவேக் என முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியவர்.

மறைந்த மயில்சாமி

மறைந்த மயில்சாமி

தன்னுடைய இயல்பான காமெடியால் ரசிகர்களை கட்டிப் போட்ட மயில்சாமி, குணச்சித்திர நடிப்பிலும் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து நடித்துவந்த மயில்சாமி, நேற்றைய தினம் மாரடைப்பால் காலமானார். இதனால் தமிழ்த் திரையுலகமே மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் திரைப்பிரபலங்கள் பலரும் மயில்சாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மயில்சாமியின் உடல் தகனம்

மயில்சாமியின் உடல் தகனம்

இதையடுத்து இன்று காலை அவரது உடல் வடபழனியில் உள்ள ஏவிஎம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தன்னுடைய சிறப்பான நடிப்பால் மட்டுமில்லாமல் உதவும் குணத்தாலும் அனைவரையும் கவர்ந்த மயில்சாமி, சிறந்த எம்ஜிஆர் ரசிகராகவும் இருந்தவர். மயில்சாமி வாழ்க்கையில் எம்ஜிஆர்தான் எல்லாமுமாக இருந்தார்.

எம்ஜிஆரின் ரசிகர்

எம்ஜிஆரின் ரசிகர்

சினிமாவில் சம்பாதித்த காசில் எம்ஜிஆர் டாலரை வாங்கி மயில்சாமி மாட்டிக் கொண்டதாக மறைந்த காமெடி நடிகர் விவேக் ஒரு படவிழாவில் பேசியிருந்தார். அப்படிப்பட்ட மயில்சாமி, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் செய்த உதவியின்போது அந்த டாலரை தயங்காமல் கழட்டிக் கொடுத்ததாகவும் விவேக் குறிப்பிட்டிருந்தார்.

எம்ஜிஆரின் பாடல் வரிகள்

எம்ஜிஆரின் பாடல் வரிகள்

மயில்சாமி தனது காரின் முன்பக்கத்தில் எம்ஜிஆரின் புகைப்படத்தை வைத்திருப்பார். அதேபோல பின்பக்கத்தில் எம்ஜிஆர் என்று எழுதியிருப்பார். இதனிடையே ஒரு பட விழாவில் எம்ஜிஆர் குறித்து பேசிய மயில்சாமி, உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஒரு பாடலில் வரும் நல்லது நினைப்பது அறிவாற்றல்.. அல்லது நினைப்பது அழிவாற்றல் என்ற பாடல் வரிகள் எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்தமானது என்பதை நினைவு கூர்ந்திருந்தார்.

தீவிர சிவ பக்தர்

தீவிர சிவ பக்தர்

தீவிர சிவ பக்தராக இருந்த மயில்சாமி பவுர்ணமி நாளில் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்வதையும் மகா சிவராத்திரியில் சிவன் கோயிலில் இரவு வழிபாட்டில் ஈடுபடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். மகா சிவராத்திரி பூஜையில் பங்கேற்ற அவர் சில மணிநேரங்களிலேயே உயிரிழந்தது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X