இறப்பு குறித்து அன்றே பேசிய மயில்சாமி.. உருக வைக்கும் வார்த்தைகள்!

சென்னை : நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை தனது வீட்டில் உயிரிழந்தார்.

தான் உயிர்வாழ்ந்த இத்தனை ஆண்டு காலத்தில் தன்னுடைய நடிப்பாலும் பிறருக்கு உதவும் குணத்தாலும் அனைவரையும் கவர்ந்தவர் மயில்சாமி.

மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாகவும் இருந்த மயில்சாமி காமெடியால் மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப் போட்டவர்.

நடிகர் மயில்சாமி

நடிகர் மயில்சாமி

நடிகர் மயில்சாமி கடந்த 1984ம் ஆண்டில் வெளியான தாவணி கனவுகள் படத்தின்மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித், சத்யராஜ், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சிறிய வேடமானாலும் அதிலும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்திக் கொள்ளும் திறமை வாய்ந்தவர் மயில்சாமி.

முன்னணி நடிகர்களுடன் நடிப்பு

முன்னணி நடிகர்களுடன் நடிப்பு

வடிவேலு, விவேக் உள்ளிட்டவர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார் மயில்சாமி. காமெடியனாக மட்டுமில்லாமல் குணசித்திர வேடங்களிலும் சிறப்பான பல படங்களில் நடித்துள்ளார் மயில்சாமி. நல்ல நடிகனாக மட்டுமில்லாமல் பிறருக்கு உதவும் குணத்தாலும் அனைவரையும் கவர்ந்தவர் மயில்சாமி.

மாரடைப்பால் இறப்பு

மாரடைப்பால் இறப்பு

இந்நிலையில் நேற்று அதிகாலை மாரடைப்பு காரணமாக மயில்சாமி உயிரிழந்துள்ளார். மகா சிவராத்திரியையொட்டி கேளம்பாக்கத்தில் சிவன் கோயிலில் இரவு வழிப்பாட்டை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய மயில்சாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுதது மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் இறுதி செய்துள்ளனர்.

மயில்சாமி உடல் தகனம்

மயில்சாமி உடல் தகனம்

இதனிடையே இன்று காலை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து அவரது உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, வடபழனி ஏவிஎம் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இறப்பு குறித்து மயில்சாமி

இறப்பு குறித்து மயில்சாமி

இந்நிலையில் தன்னுடைய இறப்பு குறித்து மயில்சாமி படவிழா ஒன்றில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது. நிறைய நாட்கள் உயிருடன் இருக்கும் ஆசை தனக்கு இல்லை என்றும் ஆனால் உயிருடன் இருக்கும் வரை உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை தனக்கு உள்ளதாகவும் அவர் அந்த மேடைப் பேச்சில் பேசியுள்ளார்.

மற்றவர்களுடன் சுமூக உறவு

மற்றவர்களுடன் சுமூக உறவு

சத்யராஜ், சரத்குமார், பி வாசு, விவேக் உள்ளிட்டவர்களுக்கு ஏதாவது பிரச்சினை அல்லது உதவி தேவை என்றால் தான் உடனடியாக போன் போட்டு பேசுவேன் என்றும், அதேபோலத்தான் அவர்களும் தன்னிடம் இருந்து வருவதாகவும் மயில்சாமி கூறியுள்ளார். இதற்கு காரணம் தன்னைப் பற்றி அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X