சுந்தர்.சி வைத்த பார்ட்டியில் கும்மாளம்! மீனா தோளில் கை போட்ட விஷால்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க

சென்னை: இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் சுந்தர் சி. என்னதான் அவரிடம் பலத்திறமைகள் இருந்தாலும், அவரை இயக்குநர் என குறிப்பிடுவது சிறந்த ஒன்றாக இருக்கும். கமர்ஷியல் வெற்றி கொடுக்க பல இயக்குநர்களும் நடிகர்களும் முட்டி மோதிக்கொண்டு இருக்கும்போது 12 ஆண்டுகளுக்கு முன்னர் தான் எடுத்த மத கஜ ராஜாவை இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்து, பெரும் வெற்றியைக் கொடுத்துவிட்டார். இந்நிலையில் அவர் நேற்று, அதாவது ஜனவரி 21ஆம் தேதி தனது, 57வது பிறந்தநாளைக் கொண்டாடினர்.

sundar c vishal aishwarya rajesh

மத கஜ ராஜா வெற்றி, தனது பிறந்த நாள் என இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருந்த சுந்தர் சி, தனது திரைத்துறை நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார். இதில் கலந்து கொண்ட நடிகை மீனா, அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும், தான் பகிர்ந்த புகைப்படங்களுக்கு மீனா பதிவிட்டிருந்த கேப்ஷனும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனிப்பினைப் பெற்றுள்ளது.

sundar c vishal aishwarya rajesh

சுந்தர் சி இயக்கி, விஷால், சந்தானம், வரலக்‌ஷ்மி சரத்குமார், அஞ்சலி, மனோபாலா, மணிவண்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் மத ஜக ராஜா. இந்தப் படம் கடந்த 2013ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு, ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. இதனால் 12ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு பொங்கலுக்கு, அதுவும் ஞாயிற்றுக்கிழமை ரிலீஸ் ஆனது. விஜய் ஆண்டனி இசையில் இந்த படம் உருவாகி இருந்தது.

sundar c vishal aishwarya rajesh

இந்தப் படம் வெளியாகி பெரும் வெற்றிப் படமாக மாறியது. வசூலில் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. படத்தினை சுமார் 13 கோடிகளில் எடுத்து முடித்துள்ளனர். ஆனால் படம் இதுவரை ரூபாய் 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் படக்குழு நம்புகின்றது.

sundar c vishal aishwarya rajesh

மீனா: படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, இயக்குநர் சுந்தர் சி, தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார். அதுவும் இந்தப் பார்ட்டியை அவர் தனது பிறந்த நாளில் கொடுத்துள்ளார். இந்தப் பார்ட்டியில், சுந்தர் சி, அவரது மனைவியும் நடிகையுமான குஷ்பு, அவர்களது மகள்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், மீனா, விஷால், யோகி பாபு, தொகுப்பாளினி டிடி, ஐஸ்வர்யா ராஜேஸ், சங்கீதா, நடன இயக்குநர் பிருந்தா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

sundar c vishal aishwarya rajesh

விஷால்: இது தொடர்பான புகைப்படங்களை நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் நடிகர் விஷால் மீனாவின் தோளின் மீது கை வைத்து நிற்கின்றார். மற்றொரு புகைப்படத்தில், அதாவது கே.எஸ். ரவிக்குமார் இருக்கும் புகைப்படத்தில் கிளாஸ்கள் உள்ளது. அதில் இருப்பது மதுவா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் பார்ட்டியில் செம கும்மாளம் போல எனவும் பேசி வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு மீனா, 2025ஆம் ஆண்டில் முதல் முறையாக ஒன்று கூடியுள்ளோம் என கேப்ஷன் இட்டுள்ளார்.

sundar c vishal aishwarya rajesh

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X