குடிப்பதற்காக பல தில்லாலங்கடி வேலைபார்த்தார்... வடிவேலுவை திட்டிதீர்த்த மீசை ராஜேந்தர்!

சென்னை : குடிப்பதற்காக பல தில்லாலங்கடி வேலைபார்த்தார் வடிவேலு என அவருடன் இணைந்து நடித்த சக நடிகர் மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மீசை ராஜேந்திரன்.

இவர், விஜயகாந்தின் தேமுதிகவிலும் இணைந்து பணியாற்றி உள்ளார்.

Actor Meesai rajendran shared shock news about comedy actor vadivelu

மீசை ராஜேந்திரன் :

சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள மீசை ராஜேந்திரன், யூடியூப் சேனல்களில் சினிமா குறித்தும்,பல நடிகர்கள் குறித்தும் பேசி வருகிறார். அந்த வகையில் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்த மீசை ராஜேந்திரன், நடிகர் வடிவேலு குறித்து பல விஷயங்களை புட்டு புட்டு வைத்துள்ளார்.

நேரத்தில் வரமாட்டார் :

அதில், வடிவேலுவிற்கு பட வாய்ப்பு பறிபோக காரணம் அவருடைய செயல் தான். அவருடன் நான்கு படங்கள் நடித்திருக்கிறேன். படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வரமாட்டார். அதே போல, படப்பிடிப்பில் அனைவர் இடத்திலும் கடுமையாக நடந்து கொள்வார். திரையில் நீங்கள் பார்க்கும் வடிவேலுவிற்கும், செட்டில் இருக்கும் வடிவேலுவும் வேறுமாதிரி இருப்பார்கள்.

Actor Meesai rajendran shared shock news about comedy actor vadivelu

தொல்லை கொடுப்பார் :

இயக்குனரிடம் சில விஷயங்களை மாற்ற சொல்லி பல இடையூறுகளை படப்பிடிப்பில் செய்து கொண்டே இருப்பார். தாமதமாக வருவார் இரவு 8 மணி ஆனால் போதும், படப்பிடிப்பு எப்போது முடியும் என கேட்டுக்கொண்டே இருப்பார். இதனால், பல இயக்குநர்கள் வேறுவழியில்லாமல் இவரை புக் செய்தார்கள் என்றார்.

குடிப்பதற்காக தில்லாலங்கடி வேலை :

மேலும், குடிப்பதற்காக பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்து இருக்கிறார் வடிவேலு அதாவது, இவர் நடிக்கும் படத்தில் உதவியாளர், மேக்கப் டச்சப், கார் மற்றும் டிரைவர் என அனைவருக்கும் சேர்த்து தயாரிப்பாளரிடம் பத்தாயிரம் ரூபாய் என்று மொத்தமாக பேட்டா காசு வாங்குவார். ஆனால், கொடுப்பது என்னவோ, 100, 200 என்று பிரித்து கொடுத்து கொடுத்துவிட்டு, மீதி பணத்தை ஆட்டைப்போட்டு அந்த பணத்தை குடித்தே காலி செய்துவிடுவார். இது மட்டுமில்லை குடிப்பதற்காக பலவேலைகளை வடிவேலு செய்து இருக்கிறார் என்று நடிகர் மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X