விரலை வெட்ட சொன்னாங்க.. என்னிடம் இழப்பதற்கு ஒன்னுமே இல்லை..மீசை ராஜேந்திரன் பேட்டி!

சென்னை: என் விரலை வெட்ட சொன்னாங்க என்று மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

லியோ படம் வெளியாவதற்கு முன்பாக ஜெயிலர் பட வசூலை லியோ முந்தாது. அப்படி முந்தினால் நான் என் மீசையை எடுத்து கொள்கிறேன் என சவால் விட்டிருந்தார் நடிகர் மீசை ராஜேந்திரன்.

actor meesai rajendran talks about leo movie box office collection

நடிகர் மீசை ராஜேந்திரன் பேட்டி: விஜய்க்கு எதிராக அவர் பேட்டி அளித்ததை அடுத்து அவருக்கு எதிராக நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில், லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான கைதி, மாஸ்டர் படங்களில் பல விஷயங்கள் மிஸ்கிங். அது படம் போகும் வேகத்தில் தெரியாது. இதனால், தான் ரஜினி படத்தோடு விஜய் படத்தை கம்பேர் செய்யாதீர்கள் என்று சொன்னேன்.

சோம்பு தூக்கவில்லை: ஜெயிலர் படத்திற்கு அனைத்து தரப்பு வயதினரும் வந்தார்கள் அதே போல சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக ஜெயிலர் படம் 6.50 கோடி வசூல் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதை வைத்துத்தான் லியோ அவ்வளவு வசூரை எட்டாது என்று சொன்னேன். அப்போது,சவால் விடுங்க என்று ஒரு யூடியூபர் சொன்னதால், நான் மீசையை எடுத்துக்கொள்கிறேன் என்றேன். அதன் பிறகு என் மகள் ஏன் இப்படி பேசுறீங்க என்று திட்டினார். நான் விஜய் சாருடன் பல திரைப்படத்தில் நடித்து இருக்கிறேன். இதற்காக நான் ரஜினி சாருக்கு சோம்பு தூக்கவில்லை.உண்மையை பேசுகிறேன்.

விரலை வெட்டணும்: நான் மீசையை எடுத்துவிடுகிறேன் என்று சொன்னதும், பலர் என்னை மோசமாக விமர்சித்தார்கள். விஜய்யின் தீவிர ரசிகை ஒருவர், அவரின் மீசை எடுக்கக்கூடாது, அவரின் விரலை வெட்டவேண்டும் என்று சொல்கிறார், நான் ஒரு சினிமா காரன் என்னிடம் இழப்பதற்கு ஒன்னுமே இல்லை.

10 நாளில் ஆயிரம் கோடியா? லியோ முதல் நாள் ரூ148 கோடினு சொன்னாங்க 10 வது நாளில் ஆயிரம் கோடினு சொல்லுவாங்க என்று சொன்னேன் அதே போலத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் எதையும் அதிகாரப்பூர்வமாக அவர்கள் இதுவரை அறிவிக்க வில்லை. இன்னும் இரண்டு நாளில் லியோ மொத்த வசூல் என்ன என்பது தெரிந்து விடும் என்று மீசை ராஜேந்திரன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X