Mime gopi: க்ளைமாக்ஸ் காட்சியில் கண்ணிமைக்க மறந்துட்டேன்.. ஜமா படம் குறித்து மைம் கோபி நெகிழ்ச்சி!

சென்னை: நடிகர்கள் சேத்தன், அம்மு அபிராமி, மணிமேகலை இளவழகன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜமா படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படம் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. படத்தை கூழாங்கல் படத்தை தயாரித்த லெர்ன் அண்ட் டெக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ள நிலையில் அவரே எழுதி இசையமைத்த நீ இருக்கும் என்ற பாடல் முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. முன்னதாக வெளியான டீசரும் அதிகமான கவனத்தை பெற்றுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து படத்திற்கான மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில் படம் குறித்து பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Mime gopi

ஜமா படம்: கூழாங்கல் என்ற சிறப்பான திரைப்படத்தை தயாரித்த லெர்ன் அண்ட் டெக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் ஜமா. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஜமா படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பாரி இளவழகன். படத்தை இயக்கியதுடன் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தமிழகத்தில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் சவால்களை இந்த படத்தில் கதைக்களமாக கொண்டுள்ள இளவழகன், திருவண்ணாமலையை ஒட்டிய இடங்களில் இந்த படத்தின் அதிகமான ஷூட்டிங்கை நடத்தி முடித்துள்ளார்.

ஆகஸ்ட் 2ம் தேதி ரிலீஸ்: கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதே போல படத்தின் பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் முன்னணி கேரக்டர்களில் சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயபால், கேவிஎன் மணிமேகலை, வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. நாடகங்களில் பெண் வேடம் அணியும் நபரின் வாழ்க்கையையும் நாடகக் கலைஞர்களை பற்றியும் பேசும் திரைப்படமாக ஜமாபடம் உருவாகியுள்ளது.

மைம் கோபி பாராட்டு: இந்நிலையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மைம் கோபி படக்குழுவினருக்கு மிகப்பெரிய பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தான் கண்ணிமைக்க கூட மறந்து விட்டதாக மைம் கோபி பாராட்டு தெரிவித்துள்ளார். அடவு கட்டி ஆடுவது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை என்றும் இந்த படத்தில் அதை மிகச் சிறப்பாக பாரி இளவழகன் செய்துள்ளதாகவும் மைம் கோபி பாராட்டு தெரிவித்துள்ளார். இயக்குனர் பாரி இளவழகன் தன்னுடைய மாணவர் என்று கூறிக் கொள்வதில் தான் பெருமைப்படுவதாகவும் மைம் கோபி குறிப்பிட்டுள்ளார்.

Mime gopi

முன்னணி இயக்குநர் பாராட்டு: இந்தப் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் மிகப்பெரிய பாராட்டுக்களை தொடர்ந்து கூறி வருகின்றனர். சமீபத்தில் நடந்த இயக்குநர் மீட்டிலும் முன்னணி இயக்குநர் ஒருவர் இந்தப் படம் மிகப்பெரிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாகவும் படத்திற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வித்தியாசமான கதைக்களத்திற்கு எப்போதும் ரசிகர்கள் மிகபெரிய வரவேற்பை கொடுப்பார்கள். அந்த வகையில் ஜமா படமும் சிறப்பான படமாக ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X