Mime Gopi: கமல்ஹாசனை நான் சைட் அடிச்சேன்.. நடிகர் மைம் கோபி சுவாரஸ்யம்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் உலகநாயகனாக தன்னுடைய ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். சமீபத்தில் வெளியான அவரது விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்துள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தில் அவரது சேனாபதி கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி மிரட்டலாக அமைந்துள்ளது.

தொடர்ந்து, ஹெச் வினோத், மணிரத்னம் இயக்கங்களில் நடிக்கவுள்ள கமல்ஹாசன், தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார்.

நடிகர் கமல்ஹாசனை தான் சைட் அடித்ததாக மைம் கோபி பாராட்டு: நடிகர் கமல்ஹாசன் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். சிறுவயதில் இருந்தே நடித்து வருபவர். முதல் படத்தில் இவர் பாடுவதாக அமைந்திருந்த அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடல் ரசிகர்களின் எவர்கிரீன் விருப்பத்திற்குரியது. அந்த சிறுவயதிலேயே கேமரா குறித்த பயமில்லாமல், சிறப்பான எக்ஸ்பிரஷன்களை காட்டியிருப்பார் கமல்ஹாசன். தொடர்ந்து நடன இயக்குநர், அசிஸ்டெண்ட் டைரக்டர் என்று தன்னை சினிமாவிலேயே ஈடுபடுத்திக் கொண்ட கமல், ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் மாறினார்.

Actor Mime Gopi hails Kamal haasan and his dialogue delivery

பல சூப்பர்ஹிட் படங்களை ஹீரோவாக இவர் கொடுத்துள்ளார். ஒரே வருடத்தில் இவரது ஏராளமான படங்கள் வெளியாகி ரசிகர்களை இவரை தவிர்த்து மற்ற ஹீரோக்களை யோசிக்க விடாமல் செய்தன. ஹீரோ, கேரக்டர் ரோல், வில்லன் என இவரது படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி எந்தப் படங்களை பார்ப்பது எந்தப் படங்களை விடுவது என்ற குழப்பத்தை ரசிகர்களுக்கு தந்தது. இந்நிலையில் தற்போது 70களில் உள்ள கமல்ஹாசன், தொடர்ந்து தன்னை சினிமாவில் சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார்.

இவரது தயாரிப்பு மற்றும் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான விக்ரம் படம் இவரது சிறப்புக்கு மேலும் மகுடமாக அமைந்துள்ளது. இந்தப்படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்த நிலையில், தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்தடுத்து தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இவர் தனது அதிரடியை நிரூபித்து வருகிறார். அடுத்தடுத்து ஹெச் வினோத், மணிரத்னம் படங்களில் கமல் நடிக்கவுள்ளார்.

கமல்ஹாசனுக்கு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். பிரபலங்களுக்கும், நடிகர்களுக்கும் கூட கமல்ஹாசன் மிகவும் பேவரைட். இந்நிலையில் பிரபல நடிகர் மைம் கோபி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் குறித்த தன்னுடைய உற்சாகத்தை பகிர்ந்துள்ளார். இரண்டு பக்க டயலாக்கையெல்லாம் ஒரே டேக்கில் ஓகே செய்யும் ஆளுமையாக நடிகர் கமல்ஹாசன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சூட்டிங்கின்போது தான் கமல் சாராக பார்த்ததாகவும் ஆனால் 200 பேரை கொண்ட செட்டிற்குள் அவர் வந்தவுடன் அந்த இடமே மிகவும் சைலண்டாக மாறிவிட்டதாகவும் மைம் கோபி தெரிவித்துள்ளார். அந்த டயலாக்கில் எந்த இடத்தில் இடைவெளி விட வேண்டும் என்பது உள்ளிட்ட துல்லியங்களையும் அவர் சிறப்பாக கையாண்டதாகவும், அவரது ஒவ்வொரு அங்கமும் நடித்ததாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரை சைட் அடிப்பதற்காகவே தான் அங்கேயே உட்கார்ந்துவிட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X