Soodhu Kavvum 2: அப்பனுக்கு பேபே.. பாட்டனுக்கும் பேபே.. வெளியானது சூது கவ்வும் 2 பட டீசர்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2013ம் ஆண்டில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற படம் சூது கவ்வும். எஸ்ஜே அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்தை சிவி குமார் தயாரித்திருந்தார். இந்நிலையில் 10 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. மிர்ச்சி சிவா, கருணாகரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் எஸ்ஜே அர்ஜூன் இயக்கியுள்ளார். படம் வரும் மே மாதத்தில் ரிலசாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்றைய தினம் பிரபல கல்லூரியில் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவர்களும் பங்கேற்ற நிலையில், மிர்ச்சி சிவா, சிவி குமார் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினர். பிரபல ஆங்கர் மாகாபா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் அர்ஜூன், ஷார்ட் கட்டில் ஜெயிப்பது அனைவருக்கும் பிடித்தமான விஷயம், ஷார்ட் கட்டில் ஜெயிப்பதையே இந்தப் படத்தில் கதைக்களமாக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சூது கவ்வும் படம்: நடிகர் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, ரமேஷ் திலக், கருணாகரன், எம்எஸ் பாஸ்கர், ராதாரவி ஆகியோர் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டில் வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்ற படம் சூது கவ்வும். இந்தப் படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார். கதை, திரைக்கதை, காட்சிகள், வசனம் என அனைத்திலும் அவர் தன்னுடைய சிறப்பை கொடுத்திருந்தார். இந்தப் படத்தை சிவி குமார் தன்னுடைய திருக்குமரன் என்டர்டைன்மென்ட் நிறுவனத்திற்காக தயாரித்திருந்தார். இந்நிலையில் இந்தப்படத்தின் இரண்டாவது பாகம் 10 ஆண்டுகள் கழித்து தற்போது உருவாகியுள்ளது.
சூது கவ்வும் 2 படம்: இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக மிர்ச்சி சிவா லீட் கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் கருணாகரன், ராதாரவி, எம்எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை எஸ்ஜே அர்ஜுன் இயக்கியுள்ளார். படத்திற்கு எட்வின் லூயிஸ் இசையமைத்துள்ளார். முதல் படத்தில் பாடல்கள் மற்றும் இசை மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தை போலவே இந்த படத்திலும் காமெடி காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சூது கவ்வும் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்: கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. படம் மே மாதம் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. பிரபல கல்லூரியில், கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் படக்குழுவினர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். நிகழ்ச்சியில் சிவா, சிவி குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜுடன் இணைந்து சிவி குமார் தயாரித்துள்ளார். இந்த படம் கோடை கொண்டாட்டத்திற்கு மிகச் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிர்ச்சி சிவா உற்சாகம்: பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சிவா கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் தன்னுடைய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவது இதுதான் முதல் முறை என்றும் மாணவர்களுக்கு கல்வியில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தன்னிடமும் மாகாபா-விடமும் கேட்டுக் கொள்ளலாம் என்றும் ஏனென்றால் தங்கள் இருவருக்குமே அது குறித்து எதுவுமே தெரியாது என்றும் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். இது பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா போலவே தெரியவில்லை என்றும் பிலிம்ஃபேர் விழா போல காணப்படுவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
அடுத்த அனிருத்: மேலும் முதல் பாகத்தில் அனைவரையும் கவர்ந்த சூது கவ்வும் படத்தை தற்போது இரண்டாவது பாகமாக வெளியாவதில் மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டார். படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக ஹரிஷா இணைந்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் எட்வின், அடுத்த அனிருத் என்றும் குறிப்பிட்டார். இதையடுத்து படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது. டீசரை விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சந்தோஷ் நாராயணன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டவர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











