Soodhu Kavvum 2: ரிலீஸ் தேதியை அறிவித்த சூது கவ்வும் 2.. வெய்ட்டிங்கில் சிவா ரசிகர்கள்!

சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன் , ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் சூது கவ்வும். இப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிப் படமாக மாறியது. குறிப்பாக படம் முழுக்க முழுக்க டார்க் காமெடி சப்ஜெக்ட்டில் எடுக்கப்பட்டிருக்கும் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியானதும் படத்தின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில் சூது கவ்வும் 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தெரிவித்துள்ளது.

சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களில் சீனியர் நடிகர்கள் என்றால் அது ராதா ரவி மற்றும், எம். எஸ் பாஸ்கர் மட்டும்தான். மற்ற நடிகர்கள் எல்லாம், முழுக்க முழுக்க, புதுமுக நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்கள். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருப்பார். படத்தின் பின்னணி இசை பெரும் பாராட்டினைப் பெற்றது. மேலும் படத்தின் கதை மற்றும் திரைக்கதைக்கு படம் கொண்டாடப்பட்டது.

mirchi siva soodhu kavvum 2 soodhu kavvum 2

இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி இரண்டாம் பாகத்திற்கான லீட் காட்சியைப் போல் அமைக்கப்பட்டிருந்ததால், படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்புகள் வரும்போது ரசிகர்கள் குஷியாகினர். ஆனால் படத்தின் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்றும் முதல் பாகத்தில் நடித்த பல நடிகர்கள் இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை என்றும் தகவல் வெளியானதும் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆனார்கள். அதேநேரத்தில் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகர் மெச்சி சிவா நடிக்கின்றார் எனத் தகவல் வெளியானதும் ரசிகர்கள் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தார்கள்.

முதல் பாகம் வெளியாகி 11 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. படத்தினை சி.வி. குமார் தயாரித்துள்ளார். இரண்டாம் பாகத்தின் பெயரினை, சூது கவ்வும்: நாடு நாட்டு மக்களும் என்ற பெயரில் படத்தினை உருவாக்கியுள்ளனர். படத்தினை எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கியுள்ளார். படத்தின் கேமரா மேனாக இக்னோசியஸ் தில்லை பணியாற்றியுள்ளார். அதேபோல் படத்தின் எடிட்டராக அஸ்வின் பணியாற்றுகின்றார்.

சூது கவ்வும் என்றாலே அனைவருக்கும் விஜய் சேதுபதிதான் நினைவுக்கு வருவார். அப்படி இருக்கும்போது இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது. இப்படியான நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது படம் வரும் டிசம்பர் மாதம் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. அதாவது புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆகி அடுத்த வாரத்தில் படம் ரிலீஸ் ஆகின்றது. புஷ்பா 2 படம் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு தியேட்டர்களை ஆக்கிரமித்தும், வரவேற்பையும் பெருமோ அதைப்பொறுத்துதான், சூது கவ்வும்: நாடும் நாட்டு மக்களும் படத்திற்கான தியேட்டர்கள் கிடைக்கும்.

ஏற்கனவே கூறியதைப் போல சூது கவ்வும் படத்தின் பின்னணி இசை மிகவும் பிரபலமானது. இந்நிலையில் சூது கவ்வும் 2 படத்தில் முதல் பாகத்தின் திம் மியூசிக்கைப் பயன்படுத்த முடியவில்லை. காரணம், முதல் பாகத்தின் பின்னணி இசையின் உரிமத்தை யூடியூப் சேனல் ஒன்றிக்கு விற்றுவிட்டதால், அதன் பின்னணி இசையை பயன்படுத்த கோடிக்கணக்கில் பணம் கேட்கின்றார்களாம். இப்படியான நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சி.வி. குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “ எண்ட சூதுகவ்வும் படத்தோட ஹிட் தீம் மியூசிக் Sudden Delight அ எண்ட சூதுகவ்வும் 2 படத்திலயே யூஸ் பண்ண முடியல .. காப்பிரைட்க்கு கோடில கேட்டாக ஆடியோ கம்பேனி … நாமளும் கடவுளோட கோர்ட்டுக்கு அந்த கம்பேனிய இழுக்கலாமா ?” என பதிவிட்டார். இது பலரது கவனத்தினை ஈர்த்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X