khushbu: படப்பிடிப்பில் தவறாக தொட்ட நடிகர்.. குஷ்பு சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை: நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் எவர் கிரீன் நடிகையாக இருக்கும் நடிகை குஷ்பு, திருமணத்திற்கு பிறகும் டிவி, சினிமா, அரசியல் என ஓய்வே இல்லாமல் பணியாற்றி வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குஷ்பு, படப்பிடிப்பு தளத்தில் ஒரு ஹீரோ தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதத்திற்கு முன் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது. அதில்,பல நடிகர்கள் திரைப்பட வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைக்கப்படுவதாகவும், அதற்கு ஒத்துழைப்பு தராத நடிகைகள் ஓரம்கட்டப்படுவதாகவும், நள்ளிரவு படப்பிடிப்பு தளத்தில் குடித்துவிட்டு கதவை தட்டுவதாகவும் பலவிதமான புகார்கள் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து பல நடிகைகள் தானாக முன்வந்து பல நடிகர்கள் குறித்து புகார் அளித்தனர். இதில் அம்மா கமிட்டியே ஆட்டம் கண்டு போனது.

khushbu sundar c interview

கேரவனில் கேமரா:இதுகுறித்து பேசிய ராதிகா சரத்குமார், மலையாள படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிராவை வைத்து, உடை மாற்றும் வீடியோக்களை சிலர் பார்த்து, சிரித்துக் கொண்டிருந்ததாக தெரிவித்தார். அப்போது சம்பந்தப்பட்டவரை அழைத்து எச்சரித்தாகவும் கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல், தன்னுடைய மகள் வரலட்சுமிக்கு கூட இப்படி ஒரு சம்பவம் நடந்த போது, அதை நான் தைரியமாக எதிர்கொண்டதாக கூறி இருந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ராதிகாவே இப்படி கூறியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

பெண்கள் சந்திக்கும் சவால்: இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்த கொண்ட நடிகை குஷ்புவிடம், சினிமாவில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய நடிகை குஷ்பு, திரைத்துறையில் மட்டுமின்றி எங்கு எங்கு எல்லாம் பெண்கள் பணியாற்றுகிறார்களே அங்கெல்லாம், பெண்கள் சவால்களைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். யாரோ ஒருவர் தங்களிடம் தவறாக, அத்து மீறி நடந்து கொள்ளும் போது, பெண்கள் அதுகுறித்து எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக பேச முன்வர வேண்டும், இதில் பெண்களுக்கு எந்தவிதமான அச்ச உணர்வே இருக்கக்கூடாது என்றார்.

தவறாக தொட்ட ஹீரோ: தொடர்ந்து பேசிய குஷ்பு, பல நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நடந்த மோசமான அனுபவம் பற்றி கூறினார். படப்பிடிப்பு தளத்தில், தன்னிடமே ஒரு ஹீரோ தவறான எண்ணத்தோடு என்னிடம் நெருங்கினார். அந்த நேரம், நான் பயந்துவிடவில்லை, துணிந்து அந்த நடிகரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பினேன். அதன் பின் அந்த நடிகருக்கு என் மீது ஒரு பயம் இருந்ததால், என்னிடம் தள்ளியே இருந்தார். இந்த தைரியம் தான் ஒவ்வொரு பெண்ணுக்கும் வரவேண்டும் என்று அந்த நிகழ்ச்சியில் குஷ்பு பேசி இருந்தார்.

மீண்டும் புயல்: நடிகை குஷ்பு தவறாக நடந்து கொண்ட நடிகர் யார், இந்த சம்பவம் எப்போது நடந்தது என எதையும் சொல்லவில்லை என்ற போது, பொது வெளியில் நடிகை குஷ்பு, நடிகர் ஒருவர் தவறாக தொட்டவந்தார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டிய உள்ளது திரையுலகில் மீண்டும் புயலை கிளப்பு சோஷியல் மீடியாவில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X