ஆட்டையப்போட்டுட்டாங்க பாஸ்.. பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச் சென்ற நடிகரின் பர்ஸ் திருட்டு

ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டமன்ற பொதுத் தேர்தல் இன்று அதாவது நவம்பர் 13ஆம் தேதி நடைபெறுகின்றது. மொத்தம் 81 சட்டமன்றம் உள்ள இந்த மாநிலத்திற்கு மொத்தம் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்டத் தேர்தல் மொத்தம் 43 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகின்றது. வரும் 20ஆம் தேதி 2ஆம் கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு மீதமுள்ள தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில் இங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச் சென்ற நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் பர்ஸை யாரோ திருடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே தேர்தல் வந்துவிட்டால், அரசியல் கட்சியினர் திரைத்துறையில் உள்ள பிரபலங்களை தங்களது கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க அழைப்பதுண்டு. சில நடிகர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்தால் அவர்களாகவே தேர்தல் வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிடுவார்கள். சிலர் தேர்தல் நேரங்களில் மட்டும் வந்து கல்லா கட்டிவிட்டுப் போய்விடுவார்கள். இந்தப் போக்கு இந்தியா முழுவதும் உள்ளது. திரைபிரபலங்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டால், மக்கள் அவர்களைப் பார்க்க தாங்களாகவே கூடுவார்கள் என்பதால் அரசியல் கட்சிகள் இந்த யுத்தியைக் கையாளும்.

mithun chakraborty

ஜார்கண்ட் மாநிலத்திலும் அதேமாதிரியான நிகழ்வு ஏற்பட்டுள்ளது. அதாவது ஜார்கண்ட் மாநில சினிமாவில் மிகவும் முக்கியமான மற்றும் மூத்த நடிகர்களில் ஒருவர் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி. இவர் பாஜகவில் இணைந்து பாஜகவுக்கு ஆதரவாக தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இதுமட்டும் இல்லாமல், இவர் வாக்கு சேகரிக்க வருகின்றார் என்றாலே இவரைப் பார்க்க, பொதுமக்கள் தாங்களாகவே கூட்டம் கூட்டமாக கூடுகின்றனர்.

ரசிகர்கள்: இப்படியான நிலையில் சம்பவம் நடைபெற்றபோது நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத்தில் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வந்தார். மிதுன் சக்ரவர்த்தி வருகின்றார் எனத் தெரிந்ததும், பொதுமக்களும் அவரது ரசிகர்களும் தன்பாத்தில் ஆயிரக்கணக்கில் கூடினர். ஆனால் காவல்துறை தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போதிய அளவில் இல்லை.

mithun chakraborty

பாதுகாப்பு: நடிகர் மிதுன் சக்ரவர்த்தி காரில் இருந்து இறங்கி மேடைக்கு வருவதற்குள் மக்களும் ரசிகர்களும் அவரது கையைத் தொட முண்டியடித்தார்கள். இதுமட்டும் இல்லாமல், அவர் மேடையில் ஏறிய பின்னர் அவருடன் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுக்க, மக்களும் ரசிகர்களும் மேடையில் ஏறினார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் யாரோ ஒருவர் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் பர்ஸை திருடியுள்ளார்கள்.

mithun chakraborty


பர்ஸ் திருட்டு: இதனை சிறிது நேரத்திற்குப் பின்னர் நடிகர் கண்டுபிடித்துள்ளார். அதன் பின்னர், பிரச்சாரத்தினை ஏற்பாடு செய்த கட்சிக்காரர்களிடம் இது தொடர்பாக கூறியுள்ளார். உடனே கட்சிக்காரரும், " மிதுன் சக்ரவர்த்தி நமக்காக வந்துள்ளார். அவரது பர்ஸை யார் எடுத்திருந்தாலும் அதனைக் கொண்டுவந்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்" என மேடையில் இருந்த மைக்கில் கூற, அப்போதுதான் விஷயம் வெளியே வந்தது. இது தொடர்பான தகவல்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X