68 வயதில் மோகன் ஹீரோவாக நடித்துள்ள ‘ஹரா’ எப்போ ரிலீஸ் தெரியுமா?.. 2கே கிட்ஸுக்கும் புடிக்குமாம்!
சென்னை: நடிகர் மோகன் நடித்துள்ள ஹரா திரைப்படம் எப்போது வெளியாகும் என்கிற கேள்விக்கு பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஹரா படத்தின் விழாவில் மோகன் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.
மூடுபனி படத்தின் மூலம் அறிமுகமான மோகன் தமிழ் சினிமாவில் பல வெள்ளிவிழா படங்களை கொடுத்து தயாரிப்பாளர்களையும் தியேட்டர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர்.

பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் ஹரா மற்றும் கோட் உள்ளிட்ட படங்களில் நடித்து தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்த உள்ளார்.
68 வயசு: 1956 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி கர்நாடகாவில் உள்ள முல்பகால் எனும் இடத்தில் பிறந்த நடிகர் மோகன் நேற்று தனது 68-வது பிறந்தநாளை ஹரா படக்குழுவினருடன் விழா நடத்திக் கொண்டாடினார். ஏஜிஎஸ் நிறுவனம் நடிகர் மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தது.
கோட் பட வில்லன்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் மெயின் வில்லனே நடிகர் மோகன் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வில்லனாக நடிக்கிறாரா அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பது படம் வெளியானால் தான் உறுதியாக தெரியும்.
2கே கிட்ஸுக்கும் பிடிக்கும்: விஜய் ஸ்ரீ இயக்கத்தில் மோகன், குஷ்பு, வனிதா விஜயகுமார், யோகி பாபு, அனுமோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஹரா திரைப்படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்திருக்கிறார் மோகன். சமீபத்தில் அந்த படத்தின் கட்சிகள் வெளியான நிலையில், படம் விநியோகஸ்தர்களுக்கு பிடித்துப்போய் வாங்கியுள்ளதாகவும் நிச்சயம் 2கே கிட்ஸ் முதல் அனைவரையும் இந்த படம் கவரும் என்றும் மோகன் பேசியுள்ளார்.
ஹரா ரிலீஸ் தேதி: நடிகர் மோகன் நடித்துள்ள ஹரா திரைப்படம் பிசினஸ் ஆகிவிட்டதாகவும் வரும் ஜூன் 7-ஆம் தேதி படம் தியேட்டரில் வெளியாகும் என்றும் நேற்று நடைபெற்ற ஹரா திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் மோகன் தெரிவித்துள்ளார். ஜூன் 7 ஹரா, செப்டம்பர் மாதம் 5ம் தேதி கோட் என அடுத்தடுத்து இந்த ஆண்டு தனது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கவுள்ளார் மோகன்.


Click it and Unblock the Notifications











