»   »  மயிலாப்பூரில் 1000 பேருக்கு உணவு வழங்கிய நடிகர் மோகன்!

மயிலாப்பூரில் 1000 பேருக்கு உணவு வழங்கிய நடிகர் மோகன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மயிலாப்பூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு உணவு வழங்கினார் நடிகர் மோகன்.

மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னைவாசிகளுக்கு தன்னார்வலர்களும் திரையுலகினரும் போட்டி போட்டுக்கொண்டு உதவிகள் வழங்கி வருகின்றனர்.

நடிகர் விஷால் மற்றும் நடிகர் சங்கத்தினர் வெள்ளத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினர்.

Actor Mohan distributes food to Mylapore residents

நடிகை ரேகா தனது மகளுடன் சென்று கோயம்பேடு மற்றும் சுற்றுப் புறப் பகுதிகளுக்கு உணவும் போர்வை மற்றும் உடைகளும் வழங்கினார்.

Actor Mohan distributes food to Mylapore residents

நடிகர் மோகன் இன்று காலை மயிலாப்பூருக்கு சென்று உணவுடன் பிஸ்கட் மற்றும் உடைகளையும் வழங்கினார்.

Actor Mohan distributes food to Mylapore residents

இந்தப் பொருட்களை மயிலாப்பூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள குடிசைப் பகுதிகளுக்கு தானே நேரில் சென்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கினார் மோகன்.

English summary
Actor Mohan gave food, biscuits and clothes to 1000 people in Mylapore Area.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil