Thalapathy 68: தளபதி 68 படத்தில் வில்லனாக கமிட்டான மைக் மோகன்.. அப்ப அரவிந்த் சாமி?

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் இணைந்துள்ளார் நடிகர் விஜய். படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது.

இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் பாடல் காட்சியுடன் துவங்கியுள்ள நிலையில், தற்போது அதன் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. விரைவில் படக்குழுவினர் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக வெளிநாடு செல்லவுள்ளனர்.

Actor Mohan going to join in Vijays Thalapathy68 movie as a Villain it seems

தளபதி 68 படத்தில் வில்லனாக கமிட்டான நடிகர் மோகன்: நடிகர் விஜய்யின் லியோ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சர்வதேச அளவில் உருவாக்கியுள்ளது. இந்தப் படம் கண்டிப்பாக சூப்பர்ஹிட்டடிக்கும் என்றும் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் முதல் தமிழ் படமாக அமையும் என்று கணிப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. வெளிநாடுகளில் இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங் மாஸ் காட்டியுள்ளது.

தமிழகத்திலும் படத்தின் புக்கிங் வரும் 15ம் தேதி துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த நடிகர் விஜய், வெளிநாட்டில் சுற்றுலா கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் சென்னை திரும்பிய நிலையில், படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இசை வெளியீடு தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்தானது.

இதனிடையே விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு டைரக்ட் செய்துவருகிறார். படத்தின் சூட்டிங் சென்னையில் பாடல் காட்சியுடன் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு பிரபல நடன இயக்குநர் ராஜூ சுந்தரம் நடனம் அமைத்துள்ளார். பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனிடையே கடந்த சில தினங்களாக நடத்தப்பட்ட இந்தப் பாடலின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது.

இதையடுத்து படக்குழு தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் அடுத்தக்கட்ட சூட்டிங்கை நடத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் அதிகப்பட்ச சூட்டிங் வெளிநாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் நடிகர்கள் பிரபுதேவா, பிரஷாந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க கமிட்டாகியுள்ளனர். இதேபோல நடிகைகள் சினேகா, மீனாட்சி சவுத்ரி ஆகியோரும் படத்தில் இணைந்துள்ளனர். படத்தில் பிரியங்கா மோகனும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எதுவாக இருந்தபோதிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Mohan going to join in Vijays Thalapathy68 movie as a Villain it seems

இதனிடையே இந்தப் படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது படத்தில் அவர் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக நடிகர் மைக் மோகன் விஜய்க்கு வில்லனாக மாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 80, 90களில் மிகப்பெரிய ஹீரோவாக பல வெற்றிப்படங்களை கொடுத்து வெற்றிவிழா நாயகனாகவே கொண்டாடப்பட்டவர் மோகன். இவர் தற்போதும் மிகவும் இளமையுடன் காணப்படுகிறார்.

மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களும் மோகனை தங்களது படங்களில் நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்ட நிலையில், மற்ற நடிகர்களின் படங்களில் தான் இணைய மாட்டேன் என்ற கொள்கையுடன் உறுதியாக கோலிவுட்டில் வலம்வந்த மோகன், தற்போது ஹரா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது இவர் தன்னுடைய கொள்கையை தளர்த்தி, விஜய்க்கு வில்லனாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக இவருக்கு 2 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X