எச்சில் ஊறுதே.. ஸ்பெஷல் சிக்கன் சமைத்த சூப்பர் ஸ்டார்.. மனைவிக்கும் மகனுக்கும் கொடுத்து அசத்தல்!

சென்னை: நடிகர் மோகன் லால் ஸ்பெஷல் சிக்கன் சமைத்து அதனை மனைவிக்கும் மகனுக்கும் கொடுத்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

மலையாள சினிமாவின் சூப்பர் நடிகர் என அழைக்கப்படுபவர் மோகன் லால். 40 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள சினிமாவில் டாப் நடிகராக வலம் வருகிறார்.

மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார் மோகன் லால்.

தமிழில் பல படங்கள்

தமிழில் பல படங்கள்

தமிழில் இருவர், சிறைச்சாலை, உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் மோகன்லால் இதுவரை 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 9 முறை கேரள அரசின் விருதுகளையும் பிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளை வழங்கியும் கவுரவித்துள்ளது. நடிகர் மோகன் லால் இதுவரை 340 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் வயது வித்தியாசம் இன்றி ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார்.

ஒரு மகன் ஒரு மகள்

ஒரு மகன் ஒரு மகள்

மோகன் லால் கடந்த 1988ஆம் ஆண்டு சுச்சித்ரா என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு பிரனவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மோகன் லால் அவ்வப்போது போட்டோக்கள் வீடியோக்கள் என வெளியிட்டு வருகிறார்.

ஸ்பெஷல் சிக்கன்

அந்த வகையில் நடிகர் மோகன் லால் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. அதாவது நடிகர் மோகன் லால் தனது வீட்டு கிச்சனில் ஸ்பெஷல் சிக்கன் சமைத்துள்ளார்.

மனைவிக்கும் மகனுக்கும்

மனைவிக்கும் மகனுக்கும்

குட்டி உரலில் இஞ்சி, பூண்டு, மிளகாய், தேங்காய் என அனைத்தையும் இடித்து நசுக்கி தன் கையாலேயே சமைத்துள்ளார் மோகன் லால். மேலும் தான் சமைத்த ஸ்பெஷல் சிக்கனை தனது மனைவி மற்றும் மகனை அழைத்து ருசி பார்க்க கூறியுள்ளார் மோகன் லால். அவரது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X