Mohan lal: தமிழ்ல சூப்பரா படங்கள் எடுக்கறாங்க.. லப்பர் பந்து படத்தை பாராட்டிய மோகன்லால்!
கொச்சி: நடிகர் மோகன்லால் இயக்கம் மற்றும்நடிப்பில் உருவாகியுள்ள பரோஸ் படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக முன்னதாக மோகன்லால் அடுத்தடுத்து பேட்டிகளை கொடுத்த நிலையில் அவர் தன்னுடைய கேரியர் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து சுவாரஸ்யங்களை பகிர்ந்திருந்தார்.
அவரிடம் மலையாள படங்கள் போன்று தமிழ் படங்கள் அழுத்தமான கதைகளில் ரசிகர்களை கவர்வதில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய மோகன்லால், தமிழில் சின்ன சின்ன விஷயங்களை சுவாரசியமாக கொண்டு படங்கள் வெளியாவது குறித்து பேசியுள்ளார்.

மோகன்லால் பாராட்டு: நேற்றைய தினம் மோகன்லால் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான பரோஸ் படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. முன்னதாக இந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் மோகன்லால் கலந்து கொண்டார். அவ்வாறு அவர் கொடுத்த அடுத்தடுத்த பேட்டிகளில் தன்னுடைய சினிமா பயணம் குறித்த பல்வேறு சுவாரசியங்களை அவர் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது தமிழில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற லப்பர் பந்து படம் குறித்து மோகன்லால் பாராட்டி பேசியதை பார்க்க முடிந்தது.
சிறப்பான ஆண்டு: மலையாளத்தில் இந்த ஆண்டு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. பிரேமலு, பிரம்மயுகம், ஆவேசம், மஞ்சுமல் பாய்ஸ், கிஷ்கிந்தா காண்டம், உள்ளொழுக்கு என மலையாளத்தின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியாகி மலையாள ரசிகர்களை மட்டுமில்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வசூல் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் மோகன்லாலிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மலையாளத்தில் அழுத்தமான கதைக்களங்களில் படங்கள் வெளியாவது போல தமிழ் படங்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
லப்பர் பந்து படம்: இதற்கு பதிலளித்த மோகன்லால், தமிழில் அதிகமான அருமையான படங்கள் வெளியாகி வருவதாகவும் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படம் சின்ன சின்ன விஷயங்களை வைத்து அருமையாக எடுக்கப்பட்டுள்ளது என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து, கிரிக்கெட்டை மையமாக வைத்து ஜாதிய அரசியலையும் பேசியது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா, காளி வெங்கட் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கூட ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
வசூல் சாதனை: காதல், விளையாட்டு, காமெடி என அனைத்து உணர்வுகளையும் பேசிய இந்த படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தை கொடுத்திருந்தது. எளிமையான மற்றும் குறைந்த பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படம், மிகப்பெரிய அளவில் வசூல் சாதனையை படைத்திருந்தது. இந்த படம் தமிழ் ரசிகர்களை மட்டுமில்லாமல் மலையாள ரசிகர்களையும் கவர்ந்துள்ளது என்பது குறித்து தற்போது மோகன்லால் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











