இந்திய சினிமாவின் மூத்த அங்கம்.. திலீப்குமார் மறைவு.. நடிகர் மோகன் லால் உருக்கம்!

சென்னை: நடிகர் திலீப்குமாரின் மறைவு பாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மலையாள சூப்பர் ஸ்டாரான நடிகர் மோகன் லால் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Actor Mohan lal mourns for Dilipkumar demise

பழம்பெரும் நடிகரான திலீப்குமார் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். 98 வயதான திலீப்குமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ட்ராஜிடி கிங் என்று அழைக்கப்படும் திலீப்குமாரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளை சேர்ந்த பிரபலங்களும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன் லாலும் நடிகர் திலீப்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டில் பதிவிட்டிருப்பதாவது, திலீப்குமார்ஜி இந்திய சினிமாவின் மூத்த அங்கம். அவர் எப்போதும் நினைவு கூறப்படுவார்.

Actor Mohan lal mourns for Dilipkumar demise

அவருடைய குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் இரங்கல். அந்த லெஜன்ட்டின் ஆத்மா சாந்தியடைட்டும் என பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவை பார்த்த பலரும் திலீப்குமாரின் மறைவுக்கு அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X