Mohan lal: பிரித்விராஜ் இயக்கத்தில் நடிக்கிறது ரொம்ப கஷ்டம்.. வச்சி செஞ்சிடுவாரு.. மோகன்லால் ஓபன்!
கொச்சி: நடிகர் மோகன்லால் மலையாள நடிகராக இருந்த போதிலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த ஆண்டில் ரஜினிகாந்துடன் மோகன்லால் நடித்திருந்த ஜெயிலர் படம் வெளியாகி அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இந்நிலையில் அடுத்ததாக மோகன்லால் இயக்கத்தில் பரோஸ் படம் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படம் மூலம் அவர் இயக்குநர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். 300-க்கும் மேற்பட்ட படங்களில் இதுவரை நடித்துள்ள மோகன்லால் ஆண்டிற்கு குறைந்தபட்சம் இரண்டு படங்களிலாவது நடிப்பதை வழக்கத்தில் வைத்துள்ளார். அந்த வகையில் அவரது நெரு, மலைக்கோட்டை வாலிபன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.

நடிகர் மோகன்லால்: நடிகர் மோகன்லால் மலையாள நடிகராக இருந்த போதிலும் தமிழ். தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழி படங்களிலும் அடுத்தடுத்து பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக நடித்து வருகிறார். 350க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ள நிலையில் முதல் முறையாக இயக்கத்திலும் என்ட்ரி கொடுத்துள்ளார். வரும் டிசம்பர் 25ம் தேதி மோகன்லால் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பரோஸ் படம் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த ப்ரோமோஷன்களில் பேசி வரும் மோகன்லால் தன்னுடைய படங்கள் குறித்து பல சுவாரசியமான நினைவுகளை பகிர்ந்து வருகிறார்.
பிரித்விராஜ் குறித்து மோகன்லால் பாராட்டு: அந்த வகையில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் எம்புரான் படத்தில் நடித்துள்ளது குறித்தும் அவர் தன்னுடைய உற்சாகத்தை பகிர்ந்துள்ளார். முன்னதாக இந்தக் கூட்டணி இணைந்து ப்ரோ டாடி என்ற படத்தில் காமெடி ஜானரில் நடித்திருந்தது. இதனிடையே பிரித்விராஜ் மிகவும் ஆச்சர்யமான இயக்குநர் என்று மோகன்லால் பாராட்டு தெரிவித்துள்ளார். அவருக்கு கேமரா உள்ளிட்ட பல விஷயங்கள் தெரிவதாகவும் நடிகர்கள் குறித்தும் அவர் அதிகமாக தெரிந்து வைத்துள்ளதாகவும் மோகன்லான் கூறியுள்ளார். அவரை அவ்வளவு எளிதில் திருப்தி படுத்திவிட முடியாது என்றும் தனக்கு தேவையான ரிசல்ட் கிடைக்கும் வரை அவர் தொடர்ந்து வேலை வாங்கிக் கொண்டே இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஈகோ இல்லாமல் வேலை செய்ய வேண்டும்: அவர் மிகப்பெரிய மெனக்கெடலுடன் படங்களை இயக்குவதாகவும் அவருடன் வேலை செய்வது மிகவும் கடினமானது என்றும் மோகன்லால் மேலும் கூறியுள்ளார். எந்த ஈகோவும் இல்லாமல் அவருடன் வேலை செய்ய வேண்டியுள்ளதாகவும் அந்த கேரக்டருக்கு தேவையானதைத்தான் அவர் பெற முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய இயக்கத்தில் உருவாகும் படங்களை தோல்வியடைய அவர் விடுவதில்லை என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பரோஸ் குறித்து மோகன்லால்: அடுத்தடுத்து இளம் இயக்குநர்களிடம் நடிக்க கதை கேட்டு வருவதாகவும் மோகன்லால் கூறியுள்ளார். தன்னுடைய படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அடுத்ததாக ஆவேசம் பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும் மோகன்லால் கூறியுள்ளார். இதனிடையே தன்னுடைய பரோஸ் படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மோகன்லால் தன்னுடைய படம் குறித்து தான் பேசுவதை காட்டிலும் தன்னுடைய படம் பேசுவதுதான் சிறப்பாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











