Mohan: GOAT படம் குறித்த கேள்வி.. பதிலளித்த நடிகர் மோகன்.. அட இப்படி ஒண்ணு இருக்கா!

சென்னை: விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளது. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்கிற்காக விஜய் துபாய் புறப்பட்டு சென்றுள்ளார். இதன் விமான நிலைய வீடியோக்கள் இன்றைய தினம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்நிலையில் வரும் 15 ம் தேதிக்குள் இந்த படத்திற்கான தன்னுடைய போர்ஷன்களை விஜய் நிறைவு செய்ய உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படத்தின் 50 சதவிகித டப்பிங் பணிகளையும் விஜய் நிறைவு செய்துள்ளார். தொடர்ந்து தன்னுடைய காட்சிகள் முழுமையாக எடுக்கப்பட்டவுடன் மீதமுள்ள டப்பிங் பணிகளையும் அவர் நிறைவு செய்வார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரபல ஹீரோ மோகன் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Actor Mohan opens up about Vijay s GOAT movie in his recent interview

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங், தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. சென்னை, ஹைதராபாத், பாங்காக், மாஸ்கோ ஆகிய இடங்களில் படத்தின் சூ்ட்டிங், நடந்து முடிந்துள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் படத்தின் சூட்டிங் ஒட்டுமொத்தமாக நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதிக்குள் விஜய்யின் போர்ஷன்கள் மொத்தமாக நிறைவு செய்யப்பட்டு விடும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

விஜய்க்கு வில்லனான மோகன்: 90களில் காதல் மன்னனாக கமல்ஹாசனுக்கு இணையான வரவேற்பை பெற்று அதிகமான ஹிட் படங்களை கொடுத்தவர் மோகன். இந்நிலையில் அவர் தற்போது கோட் படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்த படத்தில் அவர் வில்லனாக நடித்து வருவது ரசிகர்களை அதிகமாக எதிர்பார்க்க வைத்துள்ளது. அவர் ஹீரோவாக ஹரா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக குஷ்பூ நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மோகன் ஹரா படம் கண்டிப்பாக ரசிகர்களை வெகுவாக கவரும் என்று தெரிவித்துள்ளார்.

கோட் படம் குறித்து பேசிய மோகன்: மேலும் இந்த படத்தில் ரசிகர்கள் சுட்டிக்காட்டும் தவறுகளை தான் அடுத்தடுத்த படங்களில் திருத்திக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது அவர் நடித்து வரும் கோட் படம் குறித்தும் மோகனிடம கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மோகன், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் கேட்டுவிட்டு அடுத்ததாக கோட் படம் குறித்து அப்டேட்டை கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக உருவம் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்த மோகன், தற்போது விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் பிறந்தநாளில் அப்டேட்: இந்நிலையில் அவர் கோட் குறித்து அப்டேட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இயக்குநரிடம் கேட்டுவிட்டு சொல்வதாக எஸ்கேப் ஆகியுள்ளார். மேலும் இந்த புதிய பயணம் சிறப்பாக அமைந்து வருவதாகவும் எப்போதும்போல ரசிகர்களின் ஆதரவு தனக்கு வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் படத்தின் பாடல்கள் உருவாகியுள்ள சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் கிளிம்ஸ், டீசர் அல்லது இரண்டாவது சிங்கிள் வரும் ஜூன் மாதத்தில் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X