Rajinikanth: என்னது சூப்பர்ஸ்டாருக்கு வில்லன் மைக் மோகனா.. விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் மோதல்?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக உள்ள தலைவர் 171 படத்தின் டைட்டில் ப்ரோமோ வரும் 22ம் தேதி வெளியாக உள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். டைட்டில் ப்ரோமோ ஷூட்டிங் வேலை தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில தினங்களில் இந்த ப்ரோமோ வெளியாக உள்ள சூழலில் முன்னதாக வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

இதனிடையே இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்த தகவல்களின்படி படத்தின் கூட்டணி அமையுமானால் மிகப்பெரிய கலர்ஃபுல் காம்பினேஷனாக அது இருக்கும் என்பதில் ஐயமில்லை. ரஜினிகாந்த் அடுத்தடுத்து இளைய இயக்குனர்களுடன் இணைந்து அடுத்தடுத்து சிறப்பான படங்களை கொடுத்து வரும் சூழலில் தலைவர் 171 படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Mohan seems to be a Villain of Rajinikanth s Thalaivar 171 movie after Vijay s GOAT movie

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இந்தப்படம் அக்டோபர் மாதத்தில் வெளியாக உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனமான லைகா இரு தினங்களுக்கு முன்பு அறிவித்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் துவங்க உள்ளதாக அறிவித்திருந்தார். படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் 5-6 மாதங்களை எடுத்துக் கொண்டதாக அவர் கூறியுள்ளார். ஏப்ரல் மாதத்திலேயே துவங்கவிருந்த இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தள்ளிப் போயுள்ளது.

தலைவர் 171 படம்: இந்தப் படம் ஜூன் மாதத்தில் தொடங்கினாலும் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டத்தில்தான் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை மேற்கொள்ள உள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். படத்தின் டைட்டில் ப்ரோமோ வரும் 22ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த போஸ்டரில் ரஜினிகாந்த் கைகளில் வாட்சுகளால் போடப்பட்ட விலங்கு காணப்படுகிறது.

தலைவர் 171 நடிகர்கள்: தலைவர் 171 படம் டைம் ட்ராவலை மையமாகக் கொண்டு உருவாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருந்தபோதிலும் இந்த படம் அதிரடி ஆக்ஷன் படமாக இதுவரை இல்லாத வகையில் ரஜினியை சிறப்பாக காண்பிக்கும் படமாக அமையும் என்று லோகேஷ் கனகராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரசிகர்கள் எதிர்பார்க்காத விஷயம் படத்தில் அமையும் என்றும் கூறியுள்ளார். இதனிடையே இந்த படத்தின் நடிகர், நடிகைகள் குறித்து ஒவ்வொரு அப்டேட்டாக சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. படத்தில் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளது முன்னதாக அவரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரஜினிக்கு ஜோடியாகும் ஷோபனா?: இதையடுத்து ரஜினிக்கு இந்த படத்தில் ஷோபனா ஜோடியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக 32 ஆண்டுகளுக்கு முன்பு தளபதி படத்தில் ஜோடி சேர்ந்து ஏராளமான ரசிகர்களை சுந்தரி கண்ணால் ஒரு செய்தி என்ற பாடல் மூலம் வசீகரித்த இந்த ஜோடி, தற்போது மீண்டும் இணைய உள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனிடையே படத்தில் ரஜினிக்கு வில்லனாக மைக் மோகன் இணையவுள்ளதாகவும் இதற்கான பேச்சு வார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் வில்லனாக இணைந்துள்ளார் மைக் மோகன். இந்நிலையில் அடுத்ததாக ரஜினிக்கு வில்லனாக அவர் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வில்லனாக இணையும் மோகன்?: நீண்ட காலங்கள் நடிக்கும் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த மோகனுக்கு தற்போது அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடைய இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக பேட்ட படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த சூழலில் தற்போது மீண்டும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அல்லது ரன்வீர் சிங் இருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ இந்த படத்தில் கேமியோ கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கலர்ஃபுல் காம்பினேஷன்: தலைவர் 171 படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இணைய உள்ளதாக கூறப்படும் நடிகர்கள் மற்றும் நடிகைகள், இணைவது உறுதி செய்யப்பட்டால் அது மிகப் பெரிய மாஸ் கூட்டணியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மொத்தத்தில் கலர்ஃபுல் காம்பினேஷனாக இந்த படம் அமைய உள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X