ஜோமேட்டோ ஊழியராக மாறிய வெள்ளி விழா நாயகன் மோகன்.. பக்கத்துல வனிதா விஜயகுமார்.. ஓ அதான் விஷயமா?
சென்னை: "மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ" பாடலை கேட்டாலே அனிச்சையாக வெள்ளி விழா நாயகன் மோகன் முகம் அனைவரது நினைவிலும் தோன்றி விடும்.
உதயகீதம் பாடியே சில்வர் ஜூபிளி கொண்டாடிய நடிகர் மோகன் மீண்டும் ஹரா எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் உடன் நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார் இணைந்து நடித்துள்ளதாக வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று டிரெண்டாகி வருகிறது.

ஜோமேட்டோ ஊழியராக மோகன்: வெள்ளி விழா நாயகனாக மைக்கும் கையுமாக வலம் வந்த மோகன் இப்போ சாப்பாடு மூட்டையை தூக்கிக் கொண்டு ஹரா படத்திற்காக ஜோமேட்டோ ஊழியராக நடித்து வருகிறார்.
கிளைமேக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கும் ஹரா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. ஜோமேட்டோவுக்கு பதில் வேறு பெயர் எல்லாம் மாற்றாமல் அப்படியே அதே நிறுவன பெயர் கொண்ட சீருடையை அணிந்து கொண்டு கண்ணில் கண்ணாடி போட்டுக் கொண்டு பெரிய கருப்பு தாடியுடன் மோகன் ஆளே அடையாளம் தெரியாமல் நிற்கிறார்.

கூடவே வனிதா: ஏற்கனவே இந்த படத்தில் நடிகை குஷ்பு நடித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது நடிகை வனிதா விஜயகுமாரும் முக்கிய வேடத்தில் நடித்து வருவதை தற்போது மோகன் உடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.
மோகனின் கைகளை கோர்த்துக் கொண்டு மிகவும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோவை பதிவிட்டுள்ள வனிதா விஜயகுமார் நான் மோகனின் மிகப்பெரிய ஃபேன் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற என் பல நாள் கனவு நிறைவேறி விட்டது என பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் வாழ்த்து: மோகன் நடித்து வரும் ஹரா படம் விரைவில் ரிலீஸ் ஆக வேண்டும் என்றும் நடிகர் மோகன் உடன் வனிதா விஜயகுமார் இணைந்து நடித்ததற்காகவும் ரசிகர்கள் அவரது போஸ்ட்டுக்கு கீழ் வாழ்த்தி வருகின்றனர்.
"எங்கள் வெள்ளிவிழா நாயகன் மோகன் அவர்களோடு இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்" என்றும் நாங்களும் அவரோட பெரிய ஃபேன் தான் மேடம் என்றும் அய்யோ மோகனுக்கு என்ன ஆச்சு? ஜோமேட்டோவில் வேலைக்கு சேர்ந்து விட்டாரா? என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications











