இன்றைய அரசியலை நையாண்டி செய்யும் 3ஜி - ஒய் ஜி மகேந்திரனை வாழ்த்திய மோகன்லால்

Recommended Video

Actor Mohanlal troll politics

சென்னை: இன்றைய அரசியல் நிகழ்வுகளை வெளிக்காட்டும் வகையில் அமைந்த ஒய்.ஜி.மகேந்திரனின் 3ஜி நாடகத்தை கண்டு களித்த மலையாள நடிகர் மோகன்லால், இதே போல் மேலும் பல நாடகங்களை அரங்கேற்றம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழ் நாடக முன்னோடிகளில் ஒருவராக திகழ்பவர் ஒய்.ஜி.மஹேந்திரன். நாடக ஆசிரியர், நடிகர் மட்டுமின்றி எழுத்தாளராகவும், பாடகராகவும் தன்னை நிரூபித்தவர். தன்னுடைய நகைச்சுவையாலும், குணச்சித்திர நடிப்பாலும் மக்கள் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்தவர்.

Actor Mohanlal congratulates YG Mahendran on 3G drama

நாடக முன்னோடி ஒய்.ஜி.பார்த்தசாரதியின் மகனான இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா என இருவருக்கும் நெருங்கிய உறவினர் ஆவார். ஜெய்ஷங்கர், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடன் துணை வேடங்களில் நடித்த ஒய்.ஜி.மஹேந்திரன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ள ஒய்.ஜி.மஹேந்திரன் வெளிநாடுகளிலும் தனது நாடகங்களை மேடையேற்றியுள்ளார். அவரின் வியட்நாம் வீடு, தில்லாலங்கடி மோகனாம்பாள், இது நியாயமா சார், காசேதான் கடவுளடா போன்ற நாடகங்கள் மிகவும் பிரபலம். அவரின் நாடக ரசிகர்களின் எண்ணிக்கை ஏராளம்.

Actor Mohanlal congratulates YG Mahendran on 3G drama

பாரத் கலாச்சார், ரோஷினி ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் அப்பாஸ் கலாச்சாருடன் இணைந்து சித்ராலயா ஸ்ரீராம் எழுத்தில் ஒய்.ஜி.மஹேந்திரனின் 67வது தயாரிப்பான 3ஜி நாடகத்தின் 100வது நிகழ்ச்சி மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமியில் ஆகஸ்ட் 25ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மலையாள சூப்பர் ஆக்டர் மோகன்லால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் திருமதி வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழ் திரையுலகின் சூப்பர் ஹிட் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

Actor Mohanlal congratulates YG Mahendran on 3G drama

அனிருத் மற்றும் மோகன்லால் இருவரும் ஒய்.ஜி.மஹேந்திரனின் உறவினர்கள் ஆவர். அவர்கள் மேடையில் பேசுகையில் ஒய்.ஜி.மஹேந்திரனை வாழ்த்தி மேலும் பல மேடை நாடகங்களை ரசிகர்களுக்கு விருந்தாக படைக்க வேண்டும் என்றனர்.

இந்த நாடகம் நகைச்சுவை மற்றும் நையாண்டி நிறைந்ததாக அமைந்துள்ளது. இதில் காந்திஜி, நேதாஜி போன்ற தலைவர்களின் கதாபாத்திரங்களும் அமைந்துள்ளது இந்த நாடகத்தின் சிறப்பம்சம். அனைத்து வயதினரும் ரசித்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய அரசியல் பற்றியும் நகைச்சுவையுடன் பேசப்பட்டுள்ளது.

Actor Mohanlal congratulates YG Mahendran on 3G drama

ஒய்.ஜி.மஹேந்திரன் தற்போது வெளியாகி வெற்றிநடை போட்ட சூப்பர்ஸ்டாரின் பேட்ட படத்தில் கல்லூரி முதல்வராக ஒரு காட்சியில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1987ஆம் ஆண்டு கதை கதையாம் காரணமாம் எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்போதும் அவருக்கு இயக்கும் எண்ணமும் உண்டு. கூடிய விரையில் அவரது இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X