Actor Mohanlal: ஆடு ஜீவிதம் படத்திற்காக காத்திருந்தேன்.. நடிகர் மோகன்லால் வெறித்தனம்!
சென்னை: நடிகர் பிரித்விராஜ், அமலா பால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 28ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகியுள்ள ஆடு ஜீவிதம் படத்தை 16 ஆண்டுகள் முயற்சிக்கு பிறகு உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிளெஸ்ஸி. இந்தப் படத்திற்கான அவரது தொடர் முயற்சிகளுக்கு உறுதுணையாக பிரித்விராஜூம் இருந்துள்ளார். இந்தப் படத்திற்காக உடல் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை அவர் செய்துள்ளார். இவர்களது முயற்சிகளுக்கு மற்றும் மெனக்கெடல்களுக்கான அறுவடையை தற்போது ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு மற்றும் வசூல்மூலம் கொடுத்து வருகின்றனர்.
இந்தப் படம் 4 நாட்களிலேயே சர்வதேச அளவில் 50 கோடிக்கும் அதிகமான கலெக்ஷன்களை பெற்றுள்ளது. ஏராளமான முன்னணி நடிகர்கள் படத்தை பார்த்துவிட்டு பிரித்விராஜ் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டவர்கள் படத்தின் பிரீமியர் ஷோவை பார்த்துவிட்டு பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர். படம் நாளுக்கு நாள் ஏராளமான ரசிகர்களின் மற்றும் திரையுலகினரின் பாராட்டுக்களை குவித்து வருகிறது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் பென் யாமின் என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட இந்தப் படம் பிரித்விராஜ் கேரியரில் மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளது.

ஆடு ஜீவிதம் படம்: நடிகர் பிரித்விராஜ் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகத்திறமையுடன் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியான சலார் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது ஆடு ஜீவிதம் படம். பிரபல எழுத்தாளர் பென் யாமின் எழுத்தில் வெளியான ஆடு ஜீவிதம் நாவலை மையமாக கொண்டு இந்தப் படம் அதே பெயரில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து 16 ஆண்டுகள் முயற்சியில் இயக்குநர் பிளெஸ்ஸி உருவாக்கியுள்ளார்.
பிளெஸ்ஸி -பிரித்விராஜ் கூட்டணி: பிளெஸ்ஸி மற்றும் பிரித்விராஜ் கூட்டணியில் பல ஆண்டு முயற்சியில் உருவாகியுள்ள ஆடு ஜீவிதம் மிகப்பெரிய அதிர்வலைகளை சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் அரபு நாட்டிற்கு பிழைப்பிற்காக செல்லும் ஹீரோ, அங்கு ஆடுகளுடன் ஆட்டுப்பட்டியில் வாழும் சூழலில் அவரது போராட்டங்களை மையமாக கொண்டு படம் உருவாகியுள்ளது. தன்னுடைய மனைவி, அம்மா என சொந்தங்களை விட்டு வெளிநாட்டில் அவதிக்குள்ளாகும் இளைஞர்களை இந்தப் படம் கண்முன்னே கொண்டு வந்துள்ளது. இந்த கேரக்டருக்கு தன்னுடைய நடிப்பால் உயிர் கொடுத்துள்ளார் பிரித்விராஜ்.
கமல்ஹாசன் பாராட்டு: பிரித்விராஜ் இப்படியொரு நடிப்பை கொடுப்பார் என்று தான் நினைக்கவில்லை என்று இந்தப் படத்தின் பிரீமியர் ஷோவை பார்த்த நடிகர் கமல்ஹாசன் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநர் மணிரத்னம், நடிகர் சூர்யா உள்ளிட்டவர்களும் படத்தை பார்த்துவிட்டு தங்களுடைய வியப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் பிளெஸ்ஸிக்கும் இந்தப் படம் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றுத் தந்துள்ளது. இத்தனை ஆண்டுகால முயற்சிக்கு அவர் தற்போது பாராட்டுக்களை அள்ளி வருகிறார். இந்தக் கதைமீது அவர் கொண்ட நம்பிக்கை மற்றும் படமாக்கம் ஆகியவை அவருக்கு அதிகமான பாராட்டுக்களை கொடுத்து வருகிறது.
மோகன்லால் நெகிழ்ச்சி: இந்நிலையில் இந்தப் படம் குறித்து பேசியுள்ள பிரபல மலையாளப்பட ஜாம்பவான் மோகன்லால், அனைத்து தரப்பினரையும் போலவே தானும் இந்தப் படத்திற்காக காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், படத்தின் தலைப்பில் கூறப்பட்டுள்ள Every breath is a battle என்ற வார்த்தையை சிலாகித்து பேசியுள்ளார். இந்தப் படத்திற்காக உழைத்த அனைத்து தரப்பினரின் சுவாசமும் இந்தப் படத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்களின் பிரார்த்தனைகளும் இந்தப்படத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர்களின் இந்த பிரார்த்தனையே இந்தப் படத்தை வெற்றிக்குள்ளாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











