லாலேட்டனுக்கு என்னாச்சு? மோகன்லாலுக்கு துபாயில் திடீர் ஆபரேஷன்

By

துபாய்: நடிகர் மோகன்லாலுக்கு கையில் திடீரென ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

பிரபல மலையாள ஹீரோ மோகன்லால். இவர் தமிழில், கோபுர வாசலிலே, இருவர், ஜில்லா, காப்பான் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் மலையாளத்தில் நடித்துள்ள படம், பிக் பிரதர். சித்திக் இயக்கியுள்ள இந்தப் படத்தில், அர்பாஸ் கான், அனூப் மேனன், ஹனி ரோஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள, மலையாள படம் இது.

டிரைலர்

டிரைலர்

அடுத்த மாதம் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் மோகன்லால், பேஸ்புக்கில் டாக்டர் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

துபாய் மருத்துவமனை

துபாய் மருத்துவமனை

அதில், அவர் கையில் கட்டுப்போடப்பட்டுள்ளது. அதற்கு கீழே, என் கையை பத்திரமாகப் பார்த்துக் கொண்டதற்கு துபாய் பர்ஜீல் மருத்துவமனையின் டாக்டர் புவனேஷ்வர் மச்சானிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

ஏன் அறுவைச் சிகிச்சை

ஏன் அறுவைச் சிகிச்சை

என்ன அறுவை சிகிச்சை, எதற்காக சிகிச்சை என்பதை மோகன்லால் தெரிவிக்கவில்லை. கடந்த சில நாட்களாகவே அவர் கையில் காயத்துடன் இருந்து வந்தார். சில நிகழ்ச்சிகளில் கையில் பேண்டேஜுடன் கலந்துகொண்டார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

இதையடுத்து அவர் துபாய் சென்று ஆபரேஷன் செய்துள்ளார். அவர் விரைவாக குணமாக, ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X