ஐந்து நாள் காத்திருங்க… மரக்கார் படம் குறித்து மோகன்லால் ட்வீட்
திருவனந்தபுரம் : நடிகர் மோகன்லால் நடித்து வரும் டிசம்பர் 2ம் தேதி ரிலீசாக உள்ள படம் மரக்கார்.
பிரியதர்ஷன் இயக்கத்தில் வரலாற்று பின்புலத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது இந்தப் படம்.
இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மரக்கார் படம்
நடிகர் மோகன்லால், மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, பிரபு, அர்ஜுன், ப்ரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாயுள்ள படம் மரக்கார். இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில் வரும் டிசம்பர் 2ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ளது.

பிரம்மாண்டமான தயாரிப்பு
வரலாற்று பின்புலத்தில் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் இந்தப் படம் உருவாகியுள்ளது இயக்குநர் பிரியதர்ஷன் படத்தை இயக்கியுள்ளார். மலையாள திரைப்பட வரலாற்றிலேயே மிகுந்த பிரம்மாண்டமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

ரசிகர்கள் காத்திருப்பு
சமீபத்தில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. இவை லிரிக வீடியோ பாடல்களாக வெளியாகியுள்ளன. மேலும் படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியிடப்பட்டு அவையும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. அதில் நடிகர் விஜய் சேதுபதி பப்பிடிப்பின்போது திடீர் விசிட் செய்ததும் இடம்பெற்றிருந்தது. நடிகர் மோகன்லால் மற்றும் விஜய் சேதுபதி கலந்துரையாடியதும் இடம்பெற்றிருந்தது.

சிறப்பான தயாரிப்பு
படம் அனைத்து வகையிலும் சிறப்பாக தயாராகியுள்ளது அந்த மேக்கிங் வீடியோவில் தெரியவந்தது. மேலும் படத்தின் பிரம்மாண்டமும் தெரிந்தது. படம் இன்னும் 5 நாட்களில் ரிலீசாக உள்ள நிலையில் நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்னும் 5 நாட்கள் காத்திருக்க ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அழுத்தமான கதாபாத்திரங்கள்
படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் மஞ்சு வாரியருக்கு மிகவும் அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ளது ட்ரெயிலர் உள்ளிட்டவை மூலம் தெரிகிறது. குறிப்பாக மஞ்சு வாரியரை வித்தியாசமான கெட்டப்பில் பார்க்க முடிகிறது. தமிழ் நடிகர்கள் பிரபு மற்றும் அர்ஜுன் உள்ளிட்டவர்களும் படத்தில் இடம் பெற்றுள்ள நிலையில், தமிழில் படம் சிறப்பான வரவேற்பை இதன்மூலம் பெற முடியும். தமிழில் கலைப்புலி எஸ் தாணு படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமையை பெற்றுள்ள நிலையில், படம் தமிழக்ததில் அதிக திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

வரலாற்று பின்புலம்
மொத்தத்தில் வரலாற்று பின்புலத்துடன் அதிகமான மெனக்கெடலடன் டபம் உருவாகியுள்ள நிலையில், படம் மிகச்சிற்ந்த வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஓடிடி ரிலீஸ் செய்யப்படவிருந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் படம் ரிலீசாக உள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அவர்களும் படத்தின் ரிலீசுக்காக காத்திருககின்றனர்.


Click it and Unblock the Notifications











