நடிகர் மோகன்லாலின் தாயார் உயிரிழந்தார்.. பிரபலங்கள் இரங்கல்!
கொச்சி: நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி சற்று முன் காலமானார். அவருக்கு வயது 90. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மேலும் கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று எளமக்கரையில் உள்ள வீட்டில் உயிரிழந்தார். அவரது பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மலையான சினிமாவின் ஜாம்பவான மோகன்லால், படத்தில் பிஸியாக நடித்து வந்தாலும் தனது தாயாருடன் நெருங்கிய பிணைப்புடன் இருந்தார். தனது பரபரப்பான வேலைகளுக்கு மத்தியிலும், அவருக்காக நேரம் ஒதுக்கி அவருடன் நேரத்தை செலவிட்டு அவரை கவனித்துக்கொண்டார். என் வாழ்க்கையில் இந்த இடத்திற்கு நான் வருவதற்கு காரணம் என் தாய் சாந்தகுமாரி என்று நடிகர் மோகன்லால் பல முறை மேடையில் பேசி தாயை பெருமைப்பட வைத்துள்ளார். அண்மையில் மோகன்லால் தாதாசாகேப் பால்கே விருதை தனது தாயாருடன் பகிர்ந்து கொண்டு என் வாழ்க்கையில் பெரும் பாக்கியம் என்று மோகன்லால் கூறியிருந்தார். அந்த விருது கிடைத்ததை அறிந்ததும் தான் முதலில் சந்தித்தது தனது தாயாரைத்தான் என்று கூறியிருந்தார்.
கண்ணீர் அஞ்சலி: இந்நிலையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தகுமாரி, மேலும் கடந்த சில மாதமாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று எளமக்கரையில் உள்ள வீட்டில் உயிரிழந்தார். அவரது மறைவு பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பலரும் இணையத்தில் மோகன்லாலுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சாந்தகுமாரியின் கணவர் விஸ்வநாதன் நாயர் முன்னரே காலமானார், அவரது மூத்த மகன் பியாரிலால் 2000 ஆம் ஆண்டில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் இரங்கல்: கொச்சியில் இருக்கும் அவரது தாயாரின் உடல் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகலில் இறுதி சடங்கு நடக்கும் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சகோதரர் மோகன்லால், உங்களை நீங்களே தேற்றிக்கொள்ள முடியும். நண்பர்கள் எப்போதும் போல உங்களுக்குத் துணையாக இருப்பார்கள். இது போன்ற ஒரு இழப்பை எந்த ஆறுதலாலும் ஈடுசெய்ய முடியாது. கவனமாக இருங்கள், நாங்கள் அனைவரும் உங்களை நேசிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











