இந்த வயசுலேயும் என்னா லவ்.. மனைவியை இறுக்கி அணைத்தப்படி மோகன்லால்.. வைரலாகும் க்யூட் போட்டோ!

சென்னை: நடிகர் மோகன்லால் தனது மனைவியை கட்டியணைத்தப்படி உள்ள க்யூட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் செம்ம க்யூட் என வாயை பிளந்துள்ளனர்.

மலையாள சினிமாவின் சூப்பர் நடிகர் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் மோகன் லால். 40 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார்.

மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார் மோகன் லால். தமிழில் இருவர், சிறைச்சாலை, உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பத்ம விருதுகள்

பத்ம விருதுகள்

நடிகர் மோகன்லால் இதுவரை 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 9 முறை கேரள அரசின் விருதுகளையும் பிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ளார். மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளை வழங்கியும் கவுரவித்துள்ளது.

சுச்சித்ராவுடன் திருமணம்

சுச்சித்ராவுடன் திருமணம்

நடிகர் மோகன் லால் இதுவரை 340 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் வயது வித்தியாசம் இன்றி ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார் நடிகர் மோகன் லால். மோகன் லால் கடந்த 1988ஆம் ஆண்டு சுச்சித்ரா என்பவரை திருமணம் செய்தார்.

குறையாத காதல்

குறையாத காதல்

இவர்களுக்கு பிரனவ் என்ற மகனும், விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். பிரனவ் படங்களில் நடித்து வருகிறார். திருமணம் ஆகி 32 ஆண்டுகள் கடந்த போதும் நடிகர் மோகன்லாலுக்கு அவரது மனைவி மீதான காதல் இன்னமும் குறையவில்லை. அதற்கு சாட்சியாக அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.

வாழ்க பல்லாண்டு..

வாழ்க பல்லாண்டு..

அந்த போட்டோவில் தனது மனைவி முன்னால் நிற்க பின்னால் நின்றப்படி அணைத்துள்ளார் நடிகர் மோகன் லால். சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், செம க்யூட் என்றும் வாழ்க பல்லாண்டு என்றும் வாழ்த்தியுள்ளனர்.

Recommended Video

Mohanlal Huge response and Motivates Corona Service | Covid-19
பூஜை விழாவின் படங்கள்

பூஜை விழாவின் படங்கள்

மோகன்லால் நடிப்பில் கடைசியாக பிக் பிரதர் படம் வெளியானது. தற்போது மரக்கர்: அரபிகடலிண்டே சிம்ஹாம் குஞ்சலி மரக்கர் 4, த்ரிஷ்யம் 2 மற்றும் ராம் ஆகிய படங்கள் ரிலீஸ்க்காக காத்திருக்கின்றனர். அவர் சமீபத்தில் த்ரிஷ்யம் 2 ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து பூஜை விழாவின் புகைப்படங்களைப் பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X