சர்வதேச யோகா தினத்தில் யோகா போஸுடன் புகைப்படம் வெளியிட்ட மோகன்லால்
கொச்சி : இன்றைய தினம் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அளவில் பல்வேறு நிகழ்வுகள் இதையொட்டி நிகழ்ந்தன.
Recommended Video
இந்நிலையில் நடிகர் மோகன்லால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் யோகா போஸுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
ஹெல்த்தியான வாழ்க்கைக்கு யோகாவை பயிற்சி செய்யவும் அவர் தனது ரசிகர்களை அறிவுறுத்தியுள்ளார்.

பல்வேறு நிகழ்வுகள்
சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் மிகவும் சிறப்பான வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களும் பல்வேறு தளங்களில் தங்களது யோகா தினக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

யோகா புகைப்படம் வெளியீடு
ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகளும் சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகாசனம் செய்து அதை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் மலையாள மற்றும் தமிழ் படங்களில் நடித்துவரும் நடிகர் மோகன்லாலும் தனது யோகா போஸை புகைப்படமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

யோகா அவசியம்
மேலும் ஹெல்த்தியான வாழ்க்கைக்கு யோகாவை பிராக்டீஸ் செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தேர்ந்தெடுத்த யோகா கலைஞரை போல அவர் காணப்படுகிறார். மேலும் அதிக நாட்களாக அவர் யோகா பயிற்சி செய்ததற்கான முதிர்ச்சி அந்த புகைப்படத்தில் வெளிப்படுகிறது.

பிரம்மாண்ட வெற்றி
மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகியுள்ள த்ரிஷ்யம் 2 படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. முதல் பாகத்தை காட்டிலும் இந்த படத்திற்கு அதிகமான வரவேற்பு ரசிகர்களிடம் காணப்பட்டது. அடுத்ததாக இவரது நடிப்பில் மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் என்ற படம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக மோகன்லால் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











