மோகன்லால், பிரித்திவிராஜ் கூட்டணியில் உருவான ப்ரோ டாடி டிரைலர் அப்டேட் வெளியானது!
சென்னை : லூசிபர் கொடுத்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் பிருத்திவிராஜ் மீண்டும் இயக்கியுள்ள திரைப்படம் ப்ரோ டாடி மோகன்லால்,கல்யாணி பிரியதர்ஷன்,கனிகா,என பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்த நிலையில் ப்ரோ டாடி படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி குறித்த முக்கிய தற்போது வெளியாகி உள்ளது

பிரித்திவிராஜ் இயக்குனர் அவதாரம்
மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் மோகன்லால் தமிழிலும் சில படங்களில் நடித்து பிரபலமான நடிகராக உள்ளார். அதேபோல் நடிகர் பிருத்திவிராஜும் தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகராக உள்ளார். ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய பிரித்திவிராஜ் இப்பொழுது இயக்குனர் அவதாரத்தையும் எடுத்துள்ளார்.

அரசியல் கலந்த திரில்லர் திரைப்படமாக
கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று வசூல் சாதனையையும் செய்த லூசிபர் படத்தை இயக்கியதன் மூலம் பிரித்திவிராஜ் இயக்குனராக அறிமுகமானார். மோகன்லால்,மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய் என பலரது நடிப்பில் வெளியான லூசிபர் திரைப்படம் அரசியல் கலந்த திரில்லர் திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மலையாளத்தில் சக்கை போடு போட்ட இந்த திரைப்படம் இப்பொழுது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது அதன்படி நடிகர் சிரஞ்சீவி இந்த படத்தில் மோகன்லால் நடித்த லீட் ரோலில் நடித்து வருகிறார்

ப்ரோ டாடி
லூசிபர் வெற்றியை தொடர்ந்து மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜ் இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ப்ரோ டாடி. முற்றிலும் காமெடி கதை களத்தில் குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் மோகன்லால், பிரித்திவிராஜ் ,கல்யாணி பிரியதர்ஷன்,கனிகா மீனா, முரளி கோபி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ப்ரோ டாடி டீசர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது

டிரைலர் ரிலீஸ் தேதி
இந்த நிலையில்B ப்ரோ டாடி டிரைலர் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ப்ரோ டாடி டிரைலரை ஜனவரி 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மிக விரைவிலேயே நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் ப்ரோ டாடி படத்தின் டிரைலர் குறித்த முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அனைத்து ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். முதல் முறை இணைந்த லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து ப்ரோ டாடி திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications











