SK23 movie: டிசம்பரில் துவங்கும் SK23.. படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்துள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது எஸ்கே21 படத்தில் கமல் தயாரிப்பில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
அடுத்ததாக இவரது நடிப்பில் அயலான் படம் ரிலீசாகவுள்ள நிலையில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே23 படத்தில் கமிட்டாகியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மாவீரன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. அவரது முந்தைய படங்களான டாக்டர், டான் படங்களை போல இந்தப் படமும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 80 கோடிகளை தாண்டி இந்தப் படம் வசூலித்துள்ளது. இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
சர்ச்சைகளில் சிக்கிய சிவகார்த்திகேயன்: சமீபத்தில் சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். இசையமைப்பாளர் இமான் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதனால் திரைத்துறையில் சலசலப்புகளுக்கு உள்ளானார் சிவகார்த்திகேயன். ஆனாலும் தொடர்ந்து தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். எஸ்கே 21 படத்தின் சூட்டிங் காஷ்மீரில் தொடர்ந்து கடுமையான குளிர் உள்ளிட்டவற்றிற்கு இடையில் 3 மாதங்கள் சூட்டிங் நடத்தப்பட்டது.
எஸ்கே 21 படம்: தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. பாண்டிச்சேரியில் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை படத்தின் நாயகி சாய் பல்லவி சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. விரைவில் படத்தின் டைட்டில் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அயலான் படம்: இந்தப் படத்திற்கு முன்னதாகவே சிவகார்த்திகேயனின் அயலான் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படம் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டீசர், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டி வருகின்றன. விரைவில் படத்தின் இசை வெளியீடு குறித்தும் படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள அயலான் படத்தில் முக்கியமான கேரக்டரில் ஏலியன் கேரக்டர் சேர்க்கப்பட்டுள்ளது.

முன்னணி நடிகர்கள்: இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் இணையவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் சூட்டிங் டிசம்பர் மாத இறுதியில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் மிருணாள் தாக்கூர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார். மேலும் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகவுள்ள இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் பலரும் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஸ்கே 23 படத்தில் இணையும் மோகன்லால்: அதன் முதல்கட்டமாக பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் வித்யுத் ஜம்வால் ஆகியோர் படத்தில் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்திருந்தார் மோகன்லால். படத்தில் சிறிய வேடமாக இருந்தபோதிலும் அவருக்கு சிறப்பான கேரக்டர் ஜெயிலர் படத்தில் அமைந்தது. ரசிகர்களையும் கவர்ந்தது. இந்நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயனும் அவர் இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை எகிற செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











