Mohanlal: அன்னையர் தினம்.. தன்னுடைய அம்மாவை பெருமைப்படுத்திய நடிகர் மோகன்லால்.. ஹாப்பி மதர்ஸ் டே!

திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லால் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஹீரோவாக பல வருடங்களாக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளன. குறிப்பாக மலையாளத்தில் இவரது நடிப்பில் வெளியான திருஷ்யம் படம் அடுத்தடுத்த பாகங்களில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருந்த லூசிபர் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

தொடர்ந்து லூசிபர் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. மேலும் தன்னுடைய இயக்கத்தில் பரோஸ் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். படம் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக காணப்படுகிறார் மோகன்லால். இன்றைய தினம் அன்னையர் தினத்தையொட்டி வாழ்த்துக்களையும் நினைவுகளையும் பகிர்ந்துள்ளார்.

Actor Mohanlal wishes everyone for mother s day and shared his childhood photo with his mother

நடிகர் மோகன்லால்: நடிகர் மோகன்லால் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஹீரோவாக தொடர்ந்து முன்னணி நடிகராக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த வெற்றி படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இவரது நடிப்பில் திருஷ்யம் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து அடுத்தடுத்த பாகங்களில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மீனா மிகச் சிறப்பான காம்பினேஷனாக அமைந்திருந்தார். இந்தப் படம் தமிழில் கமல் மற்றும் கௌதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Actor Mohanlal wishes everyone for mother s day and shared his childhood photo with his mother

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: இந்நிலையில் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் மோகன்லால். தமிழில் கடந்த ஆண்டில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால் நடிப்பில் ஜெயிலர் படம் வெளியானது. இந்தப்படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்தது. தன்னுடைய மகனை கண்டுபிடிக்கும் ரஜினியின் முயற்சியில் மோகன்லால் சிறப்பாக உதவி செய்வதாக இவரது கேரக்டர் காணப்பட்டது. இந்நிலையில் அடுத்தடுத்த தமிழ் படங்களிலும் கமிட்டாகி வருகிறார் மோகன்லால். இதனிடையே சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக காணப்படுகிறார்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்: மோகன்லால் சமூக வலைதளங்களில் தன்னுடைய அடுத்தடுத்த பதிவுகளால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சக நடிகர்களுக்கான பாராட்டுக்கள், தன்னுடைய படங்களின் அறிவிப்புகள் உள்ளிட்டவற்றை இவரது எக்ஸ் தள பதிவுகளில் பார்க்க முடிகிறது. இந்நிலையில் இன்றைய தினம் அன்னையர் தினத்தையொட்டி தன்னுடைய அம்மாவுடன் தான் இருக்கும் படியான சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு ஹேப்பி மதர்ஸ் டே என்று வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார் மோகன்லால். இந்த புகைப்படத்தில் அரை ட்ரவுசர் போட்டபடி க்யூட்டாக காணப்படுகிறார்.

மோகன்லாலின் சிறுவயது புகைப்படம்: இந்த புகைப்படத்தில் மோகன்லாலின் அம்மாவும் மிகவும் அழகாக காணப்படுகிறார். இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிகமான வியூஸ்களை பெற்று வருகிறது. அன்னையர் தினத்தையொட்டி நடிகர், நடிகைகள் தங்களது வாழ்த்துக்களையும் தங்களது அம்மா குறித்த நினைவுகளையும் பகிர்ந்து வரும் சூழலில் மோகன்லால் அழகான தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. மலையாளத்தில் தற்போது பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிபர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார் மோகன்லால். இதனிடையே தன்னுடைய இயக்கத்தில் பரோஸ் படத்தையும் முடித்துள்ளார். செப்டம்பர் மாதத்தில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X