ஆர்ஜேவாக மாறிய மொட்டை ராஜேந்திரன்.. மிஸ்டர் லவ்வாக காதலர்களுக்கு டிப்ஸ்!
சென்னை: நடிகர் மொட்டை ராஜேந்திரன் நானும் சிங்கிள் தான் படத்தில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
த்ரி இன் ஏ என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'நானும் சிங்கிள் தான்'. இந்த படத்தை இயக்குநர் ரா.கோபி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ் கதாநாயகனாகவும், தீப்தி திவேஸ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மொட்டை ராஜேந்திரன், மனோபாலா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் மொட்டை ராஜேந்திரன் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மொட்டை ராஜேந்திரன் நான் கடவுள் படத்தில் மிரட்டல் வில்லனாக வந்து மிரட்டினார். இதனை தொடர்ந்து சில படங்களில் வில்லனாகவும் சில படங்களில் காமெடி கேரக்டரிலும் வந்து அசத்தி வருகிறார்.
இந்நிலையில் மொட்டை ராஜேந்திரன் நானும் சிங்கிள் தான் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். அதாவது இந்தப் படத்தில் லண்டன் வாழ் தமிழராக உள்ள மொட்டை ராஜேந்திரன், ஆர்ஜேவாக நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி மிஸ்டர் லவ் என்ற பெயரில் காதலர்களுக்கு டிப்ஸ் கொடுக்கும் நபராக நடித்திருக்கிறாராம் மொட்டை ராஜேந்திரன். காதலுக்கு உதவி செய்வது, காதல் தோல்வியடைந்தவர்களை குஷிபடுத்துவது என கலக்கியிருக்கிறாராம் மனிதர்.


Click it and Unblock the Notifications











