அடுத்தடுத்த பேரதிர்ச்சி.. பிரபல நடிகரின் தாயார் மரணம்.. முதல்வர் இரங்கல்!

சென்னை: பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் பேரனும், நடிகர் எம் ஆர் வாசுவின் மகனுமான வாசு விக்ரமின் தாயார் லலித்தாம்பாள் காலமானார். அவருக்கு வயது 83.

மூன்றாம் தலைமுறை நடிகரான எம்ஆர் வாசு விக்ரம், பாலைவனத்தில் பட்டாம்பூச்சி என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.

Actor MRR vasu vikram mother Lalithambal passed away

குணசித்திர நடிகர், வில்லன், காமெடியன் என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா மட்டுமில்லாமல், சின்னத்திரையில் சித்தி, செல்லமே, செல்வி உள்ளிட்ட தொடர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

திடீர் மறைவு: இந்நிலையில், நடிகர் எம்.ஆர். வாசு அவர்களின் மனைவியும் நடிகர் வாசு விக்ரம் அவர்களின் தாயாருமான லலிதாம்பாள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னை கோடம்பாக்கம் ஆர் என் நம்பியார் தெருவில் உள்ள வாசுவின் வீட்டில் இவரின் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடலுக்கு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் இரங்கல்: லலிதாம்பாள் அவரது மறைவுக்கு முதல்வர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசு அவர்களின் மனைவியும், நடிகர் வாசு விக்ரம் அவர்களின் தாயாருமான திருமதி லலிதாம்பாள் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் சத்யராஜின் தாயார் மரணம்: இதேபோல, நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் நேற்று காலமானார். அவருக்கு வயது 94. நேற்று இரவு 7 மணிக்கு காலமானார், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் இன்று அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது. சத்யராஜின் தாயார் மறைவுக்கு உலக நாயகன் கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து இருந்தார்.

கமல் இரங்கல்: அதில், நண்பர் சத்யராஜ் அவர்களின் தாயாரும், இளவல் சிபி சத்யராஜ் அவர்களின் பாட்டியுமான திருமதி. நாதாம்பாள் காளிங்கராயர் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். அன்னையை இழந்து வாடும் அவருக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: passed away
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X