தாத்தாவான நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.. தடபுடலான விருந்து வைக்க ஏற்பாடு.. குவியும் வாழ்த்து!

சென்னை: குணசித்திர நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யாவிற்கு ஆகஸ்ட் மாதம் வளைகாப்பு நடந்த நிலையில், நேற்று குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். தாத்தாவாகி உள்ள எம்.எஸ்.பாஸ்கருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களால் கொண்டாடப்படும் குணசித்திர நடிகராக வலம் வருபவர் எம்.எஸ். பாஸ்கர், கலைத்துறையில் ஒரு டப்பிங் கலைஞராக தனது பயணத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து கங்கா யமுனா சரஸ்வதி,மாயாவி மாரிச்சன் ஆகிய தொலைகாட்சிகளில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற நகைச்சுவைத் தொடர் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

ms baskar aishwarya baskar

எம்.எஸ்.பாஸ்கர்: அதன் பின் சினிமாவில் அறிமுகமான எம்.எஸ்.பாஸ்கர், கஜேந்திரா, போஸ், திருப்பாச்சி, சுக்ரன், கிரீடம், வரலாறு என அடுத்தடுத்த திரைப்படத்தில் நடித்தார். சந்தோஷ் சுப்ரமணியம், தசாவதாரம்,8 தோட்டாக்கள் ஆகியபடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியற்காக , சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றுள்ளார்.

ஷீலா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வரும் எம்.எஸ். பாஸ்கருக்கு ஆதித்யா பாஸ்கர் என்கிற மகனும் ஐஸ்வர்யா பாஸ்கர் என்கிற மகளும் உள்ளனர். ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் கலைஞராக பணியாற்றி வருகிறார். ஆதித்யா பாஸ்கர் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படத்தில் சிறுவயது விஜய்சேதுபதியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

ms baskar aishwarya baskar

ஐஸ்வர்யா பாஸ்கர்: எம்.எஸ். பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் சுதாகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பள்ளி நண்பரான சுதாகரை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், காதலை பெற்றோருக்கு சொல்லி பெற்றோரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து ஐஸ்வர்யா கர்ப்பமானதை அடுத்த, கணவருடன் எடுத்துக் கொண்ட பேபி பம்ப் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.

ms baskar aishwarya baskar

குழந்தை பிறந்தது: இதையடுத்து ஆகஸ்ட் மாதம் ஐஸ்வர்யாவிற்கு வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஐஸ்வர்யாவிற்கு தீபத்திருநாளான நேற்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த செய்தியை ஐஸ்வர்யா பாஸ்கர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தாத்தாவாகி உள்ள எம்.எஸ்.பாஸ்கருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தாத்தாவானதையொட்டி, சொந்த பந்தங்களுக்கு தடபுடலான விருந்து வைக்க ஏற்பாடு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X