டிவிட்டரில் இணைந்த பிரபல நடிகர்.. முதல் போட்டோவே டாப்பு... லைக்ஸை அள்ளிக்கொட்டும் பிரபலங்கள்!

சென்னை: பிரபல நடிகரான எம்எஸ் பாஸ்கர் டிவிட்டரில் இணைந்துள்ளார். அவர் ஷேர் செய்துள்ள போட்டோக்கள் லைக்ஸை அள்ளி வருகிறது.

தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் எம்எஸ் பாஸ்கர். இவர் நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்.

விசு இயக்கிய திருமதி ஒரு வெகுமதி படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார். அந்தப் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் எம்எஸ் பாஸ்கர்.

அற்புதமான நடிகர்

அற்புதமான நடிகர்

தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார் எம்எஸ் பாஸ்கர். ரஜினி, கமல், விக்ரம், விஜய் சேதுபதி, விஷால், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தர்மதுரை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அப்பாவாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

ஓ மை கடவுளே

ஓ மை கடவுளே

இதேபோல் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் தில்லான திவ்யநாதன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார் எம்எஸ் பாஸ்கர். இதுபோன்று பல படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கேரக்டர்களில் நடித்து வருகிறார். கடைசியாக ஓ மை கடவுளே படத்தில் நடித்திருந்தார்.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட்

டப்பிங் ஆர்ட்டிஸ்ட்

எம்எஸ் பாஸ்கர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்து வருகிறார். சின்னப்பாப்பா பெரிய பாப்பா சீரியலில் பட்டாபி என்ற கேரக்டரில் நடித்து பெரும் பிரபலமானார் எம்எஸ் பாஸ்கர்.. அதோடு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் உள்ளார்.

பாரதியார் கெட்டப்பில்..

பாரதியார் கெட்டப்பில்..

இந்நிலையில் நடிகர் எம்எஸ் பாஸ்கர் தற்போது டிவிட்டரில் இணைந்துள்ளார். வணக்கம்.. அனைவரும் நலமா? என கேட்டு தனது போட்டோவுடன் முதல் பதிவை ஷேர் செய்துள்ளார். தனது இரண்டாவது டிவிட்டாக, பாரதியார் கெட்டப்பில் உள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

தலையில் முண்டாசு

தலையில் முண்டாசு

தலையில் முண்டாசு, கறுப்புக்கோட் கையில் தடி, நெற்றியில் குங்குமம் என அப்படியே அச்சு அசலாக உள்ளார் எம்எஸ் பாஸ்கர். மற்றொரு போட்டோவில் அதே கெட்டப்பில் பாரதியார் படம் பதியப்பட்ட புத்தகத்தை படிப்பது போல் போஸ் கொடுத்துள்ளார்.

நடிகைகள் லைக்ஸ்

நடிகைகள் லைக்ஸ்

அவருடைய இந்த போட்டோக்கைளை நடிகைகள் ஷ்ரேயா, பூனம் பாஜ்வா, அசின் உள்ளிட்ட பலரும் லைக் செய்துள்ளனர். நெட்டிசன்கள் பலர் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் அவர் பேசும் டயலாக்கை ஷேர் செய்து, ஆயிரம் படம் நடிச்சாலும் பட்டாபி மாதிரி ஒரு கரெக்டர் வராது சார் என பதிவிட்டுள்ளனர்.

Recommended Video

V-CONNECT WITH BADRINATH EP02 | சச்சின் கொடுத்த அட்வைஸ் | FILMIBEAT TAMIL
உடல்மொழி பிரமாதம்

உடல்மொழி பிரமாதம்

மற்றொரு நெட்டிசனான இவர், எம்எஸ் பாஸ்கரின் போட்டோவை பார்த்து, ரொம்ப ரொம்ப அருமையா வந்திருக்கு நிறைய மெனக்கெட்டுருப்பீங்க போலிருக்கு என கூறியுள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர் உட்கார்ந்திருக்கும் படத்தில் உடல்மொழி பிரமாதம். மஹாகவி வேடம் உங்களுக்குப் பொருத்தம் என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X