பாலு அண்ணா சீக்கிரம் வந்துருங்கண்ணா.. ரஜினி பட டயலாக்கை சொல்லி பிரபல நடிகர் நம்பிக்கை!
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவார் என ரஜினி பட டயலாக்கை கூறி பிரபல நடிகர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த 5ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெரி மைல்ட் கொரோனாதான் விரைவில் வீடு திரும்பி விடுவேன் என வீடியோ வெளியிட்டார் எஸ்பி பாலசுப்ரமணியம்.
இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி முதல் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

பிரார்த்தனை
இதனால் ஒட்டு மொத்த ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். எஸ்பி பாலசுப்ரமணியம் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். திரைத்துறை பிரபலங்களும் எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தித்து வருகின்றனர்.

எம்எஸ் பாஸ்கர்
நேற்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் வீடியோ வெளியிட்டு எஸ்பி பாலசுப்ரமணியம் நலம் பெற வேண்டி வீடியோ வெளியிட்டனர். இந்நிலையில் நடிகர் எம்எஸ் பாஸ்கர் எஸ்பி பாலசுப்ரமணியம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

கைவிட மாட்டான்
அதில், நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்.. ஆனா கைவிட மாட்டான் அப்படிங்கிறது ரஜினி அண்ணாவோடு ஃபேமஸ் டயலாக். எஸ்.பி.பாலு அண்ணா மருத்துவமனையில் அனுமதித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்தது. நிச்சயமா ஆண்டவுடன் கைவிட மாட்டான். பாலு அண்ணா எத்தனையோ பாடல்களால கோடிக்கணக்கான ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்காங்க.

சீக்கிரம் வந்துருங்கண்ணா
சந்தோஷப்படுத்திக்கிட்டு இருக்காங்க.. சந்தோஷப்படுத்தப் போறாங்க.. நிச்சயமா அண்ணா குணமாகி வரனும்னு எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கிட்டுருக்கேன்.. பாலு அண்ணா சீக்கிரம் வந்துருங்கண்ணா.. இவ்வாறு உருக்கமாக பேசியிருக்கிறார் நடிகர் எம்எஸ் பாஸ்கர்.


Click it and Unblock the Notifications











