கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் முகேஷ் - சட்ட விரோத திருமணம் குறித்து விசாரணை

By Shankar

Actor Mukesh appears in commissioner office
சென்னை: நடிகர் முகேஷ் சமீபத்தில் செய்த சட்ட விரோத இரண்டாவது திருமணம் குறித்து இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மலையாள நடிகர் முகேஷ், பிரபல தமிழ் நடிகை சரிதாவை காதல் திருமணம் செய்தார். ஆனால் இருவருக்கும் பெரும் தகராறு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள்.

இந்த நிலையில் முகேஷ் சமீபத்தில் 2-வது திருமணம் செய்து கொண்டார். இதற்கு நடிகை சரிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இன்னும் விவாகரத்து பெறாத நிலையில் முகேஷ் இரண்டாவது திருமணம் செய்திருப்பது சட்டவிரோதம் என்று புகார் தெரிவித்தார்.

இந்த பிரச்சினை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வரை பஞ்சாயத்துக்கு வந்து விட்டது. வழக்குத் தொடரவும் சரிதா முடிவு செய்துள்ளார்.

நேற்று பகலில் நடிகர் முகேஷ், ரகசியமாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் அவரை நிருபர்கள் பார்த்து விட்டனர். எதற்காக கமிஷனர் அலுவலகம் வந்தீர்கள்? என்று கேட்டபோது, சொந்த குடும்ப பிரச்சினை காரணமாக வந்திருப்பதாக சொல்லி விட்டு, அவர் வேகமாக கமிஷனர் அலுவலகத்திற்குள் நுழைந்து விட்டார்.

அவர் வரதட்சணை ஒழிப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சியாமளா தேவி முன்னிலையில் ஆஜர் ஆனார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை விவரம் எதையும் தெரிவிக்க, கூடுதல் துணை கமிஷனர் சியாமளாதேவி மறுத்து விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X