8 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தும் புரிந்துகொள்ள முடியவில்லை.. பிரபல நடிரை விவாகரத்து செய்யும் மனைவி!

சென்னை: நடிகர் முகேஷுக்கு அவரது இரண்டாவது மனைவியான தேவிகா விவாகரத்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் முகேஷ். மலையாள மொழியில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் மனைவி ஒரு மாணிக்கம், ஜாதி மல்லி, ஐந்தாம் படை, பொன்னர் சங்கர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சரிதாவுடன் திருமணம்

நடிகை சரிதாவுடன் திருமணம்

தற்போது கேரள மாநிலம் கொல்லம் தொகுயின் எம்எல்ஏவாகவும் உள்ளார் முகேஷ். கடந்த 1988 ஆம் ஆண்டு நடிகை சரிதாவை திருமணம் செய்தார் முகேஷ். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இந்நிலையில் 2011ஆம் ஆண்டு சரிதாவை விவாகரத்து செய்தார். பின்னர் 2013ஆம் ஆண்டு பரத நாட்டிய கலைஞர் தேவிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் முகேஷ்.

விவாகரத்து நோட்டீஸ்

விவாகரத்து நோட்டீஸ்

இந்நிலையில் கணவன் மனைவியான முகேஷ் - தேவிகா இடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. முகேஷை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ள தேவிகா, தனது வழக்கறிஞர் மூலம் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நல்ல கணவர் இல்லை

நல்ல கணவர் இல்லை

இதுகுறித்து பேசியுள்ள தேவிகா, முகேஷ் நல்ல கணவர் இல்லை. 8 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தும் அவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவரை புரிந்துகொள்ள முடியாது.

என தனிப்பட்ட முடிவு

என தனிப்பட்ட முடிவு

எனவேதான் பிரிய முடிவு செய்தேன். எனக்கு முகேஷ் மீது எந்த கோபமும் இல்லை. விவாகரத்து என்பது தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முடிவு. இந்த முடிவை எடுத்த பிறகு நான் ஒரு கடினமான சூழ்நிலையை சந்திக்கிறேன்.

அவதூறு செய்ய விரும்பவில்லை

அவதூறு செய்ய விரும்பவில்லை

எனவே இதை அமைதியாக சமாளிக்க என்னை அனுமதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நான் அவரை அவதூறு செய்ய விரும்பவில்லை. ஒரு அரசியல்வாதி மற்றும் நடிகராக அவரது தனிப்பட்ட பிரச்சனைகளை அவரது வாழ்க்கையுடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை.

கோபமாக பிரிய விருப்பமில்லை

கோபமாக பிரிய விருப்பமில்லை

அவரை விட்டு கோபமாக பிரிந்து செல்லவும் விரும்பவில்லை. எனது விவாகரத்து மனுவில் முகேஷுக்கு எதிராக குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை நான் எழுப்பவில்லை. அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க எனக்கு விருப்பமில்லை என கூறியுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டு

பாலியல் குற்றச்சாட்டு

நடிகர் முகேஷ் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். முன்னதாக 2014ஆம் ஆண்டு நடிகர் முகேஷ் மீது பாலிவுட் தொழில்நுட்ப கலைஞரான தேஸ் ஜோசப் மீடூ புகாரை கூறினார். க்யூஸ் புரோகிராமின் போது முகேஷ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறினார்.

துடைப்பத்தால் அடிப்பேன்

துடைப்பத்தால் அடிப்பேன்

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தன்னை போனில் தொடர்பு கொண்ட பத்தாம் வகுப்பு மாணவியை துடைப்பத்தால் அடிப்பேன் என்று கூறினார். முகேஷ் பேசிய இந்த போன் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவரது மனைவி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X