Munishkanth: எனக்காக லோகேஷ் கனகராஜ் வெயிட் பண்ணாரு.. மாநகரம் பட அனுபவத்தை பகிர்ந்த முனீஸ்காந்த்!
சென்னை: நடிகர் முனிஸ்காந்த் தமிழில் மிகச்சிறப்பான நடிகராக வலம்வருபவர். ராமதாஸ் என்கிற பெயரில் நடிக்கவந்து முனிஸ்காந்தாக பிரபலமாக நடித்து வருபவர். ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவரும் முனிஷ்காந்தின் சிறப்பான என்ட்ரியாக முண்டாசுப்பட்டி குறும்படம் அமைந்தது.
தன்னுடைய குரலே தனக்கு அதிகமான சினிமா வாய்ப்புகளை பெற்றுத் தந்து வருவதாக பெருமையாக கூறும் முனிஸ்காந்த், ஒரு காலகட்டத்தில் இந்தக் குரலை வைத்தே தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். முண்டாசுப்பட்டியில் சீரியஸ் கேரக்டராக வரும் வெட்டியான் கேரக்டருக்காகத்தான் தான் ஆடிஷனுக்கு சென்றதாகவும் ஆனால் தனக்கு முனிஸ்காந்த் கேரக்டர் வழங்கப்பட்டதாகவும் தற்போது அவர் கூறியுள்ளார்.

நடிகர் முனிஸ்காந்த்: நடிகர் முனிஸ்காந்த் தமிழின் தவிர்க்க முடியாத மற்றும் சிறப்பான நடிகராக வலம்வந்துக் கொண்டிருக்கிறார். இவர் இல்லாமல் வெளியாகும் புதுப்படங்களின் எண்ணிக்கை குறைவு என்று கூறுமளவிற்கு அடுத்தடுத்து ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் முனிஸ்காந்த். ராமதாஸ் என்ற பெயரில் நடிக்க வந்து, தன்னுடைய கேரக்டரின் பெயராலேயே தற்போது முனிஸ்காந்தாக மாறியுள்ளார். தான் சாகும்வரையில் சினிமா சாப்பாடு சாப்பிட வேண்டும என்று விரும்புவதாகவும் நாசர் உள்ளிட்டவர்களை போல கேரக்டர் ரோல்களில் நடித்தால் மட்டுமே தொடர்ந்து சினிமாவில் நீடிக்க முடியும் என்று கனவு கண்டதாகவும் கூறியுள்ளார் முனிஸ்காந்த்.
முனிஸ்காந்த் கேரக்டர்: முண்டாசுப்பட்டி படத்தில் வெட்டியான் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கேட்டே தான் போனதாகவும் ஆனால் தனக்கு முனிஸ்காந்த் கேரக்டர் அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மாநகரம் படத்தில் நடிக்க தன்னிடம் கதை சொல்லி லோகேஷ் கனகராஜ் கமிட் செய்ததாகவும் ஆனால் அப்போது கால்ஷீட்டில் சொதப்புவதாக கெட்டப்பெயர் இருந்ததாகவும் கூறியுள்ளார் முனிஷ்காந்த். இதை சொல்லி அதிகப்பிரசங்கித்தனமாக தான் மாநகரம் படத்தில் நடிக்க வர முடியாது என்று லோகேஷிடம் கூறியதாகவும் ஆனால் அவர் தனக்காக காத்திருந்ததாகவும் தற்போது லோகேஷ் கனகராஜ் தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
காத்திருந்த லோகேஷ் கனகராஜ்: ஆனால் தன்னுடைய அதிகப்பிரசங்கித்தனத்தை கண்டுக கொள்ளாத லோகேஷ் கனகராஜ், நீங்கதான் நடிக்க வரணும்னு வெயிட் செய்ததையும் முனிஸ்காந்த் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த நேரத்தில் நீ என்ன அவ்வளவு பெரிய அப்பா டக்கரா என்று நினைத்து தனக்கு பதிலாக அந்த கேரக்டரில் வேறு யாரையாவது லோகேஷ் கனகராஜ் நடிக்க வைத்திருக்கலாம், ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை என்பதையும் முனிஸ்காந்த் தற்போது நினைவு கூர்ந்துள்ளார். மாநகரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜுடன் இணையும் வாய்ப்பு தனக்கு வாய்க்கவில்லை என்பதையும் அவர் முன்னதாக கூறியிருந்தார்.
கோபமா என கேட்ட முனிஸ்காந்த்: இதுகுறித்து தான் அவரிடமே நேரிடையாக போய் கேட்டதாகவும் தன்மீது ஏதாவது கோபம் இருந்தால் அதை சொல்லுங்கள் தான் மன்னிப்பு கேட்கிறேன் என்று முனிஸ்காந்த் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் கைதி, விக்ரம், மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் முனிஸ்காந்தை இணைக்கும் வாய்ப்பு சரியாக அமையவில்லை என்பதை லோகேஷ் கனகராஜ் தன்னிடம் குறிப்பிட்டு கூறியதாகவும் முனிஸ்காந்த் வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் இணையும் தன்னுடைய நம்பிக்கை குறித்தும் அவர் பேசியிருந்தார்.


Click it and Unblock the Notifications











