அதர்வாவின் தம்பிக்கு அடித்த ஜாக்பாட்.. மருமகனை ஹீரோவாக்கும் விஜய்யின் மாமா.. ஹீரோயின் யார் தெரியுமா?

சென்னை : நடிதர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியை மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தொழிலதிபராகவும் வலம் வருபவர் சேவியர் பிரிட்டோ.

நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினரான இவர், விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ

தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ

தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மகள் சினேகாவும், மறைந்த நடிகர் முரளியின் மகனும், நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளிக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கொரோனா காலத்தில் திருமணம் நடைபெற்றதால், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில்

மிகப்பெரிய பட்ஜெட்டில்

சேவியர் பிரிட்டோ தனது மருமகன் ஆகாஷ் முரளியை சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ளார். இப்படத்தை 35 கோடியில் மிகவும் பிரம்மாண்டமான மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டார். இந்த படத்தை பிரபல இயக்குனரான விஷ்ணுவர்தன் இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவர் அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கியவர் ஆவார்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆனால், இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த படம் தொடங்கவில்லை. மேலும், இந்த படத்தை கிட்டத்தட்ட 35 கோடியில் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்கவும் விஷ்ணுவர்த்தன் அட்வான்ஸ் தொகையை ஏற்கனவே வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

ஜோடி யார் தெரியுமா?

ஜோடி யார் தெரியுமா?

இந்நிலையில், இப்படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நடிகை அதிதி ஷங்கர் கடந்த ஆண்டு முத்தையா இயக்கிய விருமன் படத்தில்,கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது இவர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நிறங்கள் மூன்று

நிறங்கள் மூன்று

ஆகாஷ் முரளியின் அண்ணான அதர்வா முரளி பானா கத்தாடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து தனக்கு தகுந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் அட்ரஸ், நிறங்கள் மூன்று, தணல் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள 'நிறங்கள் மூன்று' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை அதிகரித்துள்ளது. இதில் சரத்குமார், ரகுமான் ஆகியோர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X