திடீர் மாரடைப்பு.. பிரபல வில்லன் நடிகரின் அம்மா மரணம்.. திரையுலகம் இரங்கல்!
சென்னை: பிரபல வில்லன் நடிகரின் அம்மா, மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
Recommended Video
இந்திய சினிமாவில், கொரோனா லாக்டவுன் நேரத்தில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த பிரபல இந்தி நடிகர் இர்பான் கான், திடீரென்று மும்பையில் கடந்த ஏப்ரல் மாதம் காலமானர்.

தூக்குப் போட்டு
அவர் மரணமடைந்த அடுத்த நாளே பிரபல நடிகர் ரிஷி கபூர் மறைந்தார். இவர்களது மரணங்கள் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்து சில சின்னத்திரை நடிகர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனர். சின்னத்திரை நடிகர் மன்மீத் கிரேவல் பொருளாதாரப் பிரச்னை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார். இதேபோல டிவி நடிகை ஒருவரும் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

சிரஞ்சீவி சார்ஜா
கடந்த சில நாட்களுக்கு முன் தயாரிப்பாளர் அனில் சுரி மரணமடைந்தார். இதே போல கன்னடம் மற்றும் மலையாள சினிமாவில் திடீர் மரணங்கள் நடந்தன. பிரபல கன்னட ஹீரோ சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்தார். இது கன்னட சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வில்லனாக நடித்தவர்
இந்நிலையில், பிரபல வில்லன் நடிகர் முரளி சர்மாவின் அம்மா மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நடிகர் முரளி சர்மா, தமிழில், பட்டத்து யானை, ஆரம்பம், பாயும் பலி, அஞ்சான், கென்னடி கிளப், சாஹோ உட்பட பல படங்களில் வில்லனாக நடித்தவர். இந்தியில், மைன் ஹூன் னா, தமால், கோல்மால் ரிட்டர்ன்ஸ், பட்லாபூர் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

திடீர் மாரடைப்பு
தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவி அஸ்வினி கல்சேகர் இந்திப் பட நடிகை. ஜோதா அக்பர், பட்லாபூர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். முரளி சர்மாவின் அம்மா, பத்மா சர்மா, மும்பையில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார். அவருக்கு வயது 77. இறுதிச்சடங்கு மும்பையில் நடந்தது. அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











