என்ன சொல்றீங்க நாசர் இனி நடிக்க மாட்டாரா...ஏன், என்ன காரணம் ?
சென்னை : தமிழ், தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் நடிகர் நாசரும் ஒருவர். அதிலும் பாகுபலி படத்தில் இவரது நடிப்பை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.
நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், நடிகர் சங்க தலைவர், அரசியல்வாதி என பல முகங்களைக் கொண்ட நாசர், 1985 ம் ஆண்டு ரிலீசான கல்யாண அகதிகள் என்ற படத்தின் மூலம் நடிகரானார்.
ஆரம்பத்தில் சைட் வில்லனாக நடித்து வந்த நாசருக்கு பிறகு மெயின் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவின் டாப் 10 வில்லன்களில் நாசருக்கு எப்போதும் தனி இடம் இருக்கும். தேவர்மகன் படத்தில் இவர் நடித்த மாயன் ரோலை யாராலும் மறக்க முடியாது.

பல ரோல்களில் அசத்திய நாசர்
வில்லன் ரோல்களில் அதிகம் நடித்து வந்த நாசர் பிறகு குணச்சித்திர ரோல்களிலும் நடிக்க துவங்கினார். ஜீன்ஸ் போன்ற படங்களில் அப்பாவித்தனமான சென்டிமென்ட் நடிப்பு, அவ்வை சண்முகி போன்ற படங்களில் காமெடி கலந்த நடிப்பு, குருதிப்புனல், போக்கரி போன்ற படங்களில் கம்பீரமான நடிப்பு என பல ரோல்களில் அசத்தி உள்ளார். நூற்று கணக்கான படங்களில் நடித்துள்ள நாசர், கடைசியாக ஆச்சார்யா படத்தில் நடித்தார். தற்போது Sadha Nannu Nadipe நடித்து வருகிறார்.

நாசருக்கு இப்படி ஒரு பிளாஷ்பேக்கா
நாசர் பலருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால் அவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் இந்திய விமானப்படையில் பணியாற்றி வந்துள்ளார். பிறகு நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தென்னிந்திய சினிமா சேம்பரில் நடிப்பிற்காக பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார். சினிமாவிற்கு மட்டுமல்ல சின்னத்திரை தொழில்நுட்ப பயிற்சியும் எடுத்துள்ளார்.

அரசியலிலும் பிஸி தான்
சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், அதோடு கமலின் மக்கள் நீதி மய்ய கட்சியிலும் இணைந்து பணியாற்றி வந்தார். இவரது மனைவி கமல் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். நாசர் தற்போது இரண்டாவது முறையாக நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

என்னது இனி நடிக்க மாட்டாரா
இந்நிலையில் நடிப்பில் இருந்து விலக நாசர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி விசாரித்த போது, உடல்நிலையை கருத்திக் கொண்டு தான் நடிப்பில் இருந்து விலக அவர் முடிவு செய்திருக்கிறாராம். கொரோனா தொற்று காலத்தில் இதய பாதிப்புகளால் நாசர் கடுமையாக அவதிப்பட்டு, அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இது தான் காரணமா
இதனால் நடிப்பிற்கு பிரேக் எடுத்துக் கொள்ள திட்டமிட்டிருக்கிறாராம்.சமீபத்தில் மீடியா ஒன்றிற்கு அளித்த பேட்டியிலும், தான் சினிமாவை விட்டு விலக இருக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் திரையுலகினர் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர். அதே சமயம் நாசரின் உடல்நிலை விரைவில் குணமடைந்து, அவர் மீண்டும் நடிப்பிற்கு திரும்பி வர அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Recommended Video

அப்போ தேவர்மகன் 2 ல் நாசர் கிடையாதா
கமலின் பெரும்பாலான படங்களில் நாசர் நிச்சயம் இருப்பார். ஆனால் விக்ரம் படத்தில் அவர் இல்லாதது பலருக்கும் ஆச்சரியத்தை தந்தது. இதற்கிடையில் அடுத்ததாக கமல் தேவர்மகன் 2 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுவதால், மாயன் இல்லாமல் தேவர்மகனா...அதனால் நிச்சயம் நாசர் இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நாசர் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பதால் மாயன் ரோலில் யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











