டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல நடிகருக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமைச் சிகிச்சை!
ஐதராபாத்: நடிகரும் பிரபல ஹீரோயினின் தந்தையுமான நாகபாபுவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை எடுத்து வருகிறார்.
கொரோனா வைரஸ் காரணமாக, உலக நாடுகள் பீதியில் உள்ளன. இதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலும் தினமும் அதிகரித்து வருகிறது.

ஐஸ்வர்யா ராய்
இந்த வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டனர். நடிகர் விஷால், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகை நிக்கி கல்ராணி, நவ்நீத் கவுர், நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகையும் எம்.பியுமான சுமலதா, ஷர்மிளா மந்த்ரே உள்பட பலருக்கும் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது.

நடிகர் நாகபாபு
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் தேறி வருவதாக அவர் மகன் சரண் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் நாகபாபுவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர்.

நடிகை நிஹரிகா
தமிழில் இவர், லிங்குசாமியின் வேட்டை, மீரா கதிரவன் இயக்கிய விழித்திரு, இந்திரஜித் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவர் மகள் நிஹரிகாவும் பிரபல நடிகை. தெலுங்கில் நடித்துவரும் அவர் தமிழில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் நடித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு
தெலுங்கு டிவி நிகழ்ச்சியில் தனது மகளுடன் கலந்து கொண்டார் நாகபாபு. இதையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடல் நிலை திடீரென சரியில்லாமல் போனதால், கொரோனா சோதனையை மேற்கொண்டார். அப்போது பாசிட்டிவ் என்று வந்தது. இதையடுத்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் தனிமை சிகிச்சையில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











