எங்க காதல் இப்படித்தான் ஆரம்பமாச்சு.. எனக்காக அவ்ளோ தூரம் வந்தாரு.. நாக சைத்தன்யா குறித்து சோபிதா!
ஐதராபாத்: நடிகர் நாக சைத்தன்யா மற்றும் சோபிதா துலிபாலாவிற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் வெகு விமரிசையாக திருமணம் நடந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் சோபிதாவை நாக சைத்தன்யா திருமணம் செய்துக் கொண்டார்.
கடந்த 2021ம் ஆண்டில் சமந்தாவுடனான பிரிவை நாக சைத்தன்யா அறிவித்தபோது அவர்களது ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில, நாக சைத்தன்யா - சோபிதாவுடனான நட்பே சமந்தாவுடனான பிரிவிற்கு காரணம் என்றும் ஒரு தரப்பினர் கூறிவந்தனர்.

நாக சைத்தன்யா -சோபிதா துலிபாலா: நடிகர் நாக சைத்தன்யா தெலுங்கு படவுலகின் முன்னணி நடிகராக அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார். நடிகை சமந்தாவுடன் காதல்வயப்பட்ட இவர், கடந்த 2017ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார். மிகவும் விமரிசையாக இவர்களது திருமணம் நடந்த நிலையில், மனமொத்த தம்பதியாக இவர்கள் வலம்வந்தனர். சமந்தா தொடர்ந்து நடித்துவந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டில் இவர்கள் இருவரும் இணைந்து கூட்டாக பிரிவு அறிவிப்பை வெளியிட்டனர். இவர்களின் இந்த முடிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. அதிகமான சர்ச்சைகளுக்கும் உள்ளானது.
நாக சைத்தன்யா -சோபிதா துலிபாலா திருமணம்: இதையடுத்து சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்துவந்த நாக சைத்தன்யா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்துக் கொண்டார். ஐதராபாத்தின் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் இவர்களின் திருமணம் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தங்களது காதல் கதை குறித்து இருவரும் நியூயார்க் டைம்ஸிற்கு பேட்டியளித்துள்ளனர். தங்களது நட்பு முதலில் இன்ஸ்டாகிராமில் துவங்கியதாகவும், சில தினங்கள் தொடர்ந்து நட்புடன் பேசிய நிலையில், தன்னை சந்திப்பதற்காக நாக சைத்தன்யா ஐதராபாத்திலிருந்து ஒரு மணிநேரம் விமானத்தில் டிராவல் செய்து மும்பை வந்ததாக சோபிதா தெரிவித்துள்ளார்.
நாக சைத்தன்யா -சோபிதா துலிபாலா காதல்: இதையடுத்து அடுத்த ஒரு வாரத்திலேயே நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் சந்தித்ததாகவும் இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டதாகவும் இவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து கர்நாடகாவின் பந்திப்பூர் சரணாலயத்திற்கு இருவரும் இணைந்து டிரிப் போனதாகவும் இருவரும் கூறியுள்ளனர். தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டில் சோபிதாவின் பிறந்தநாளை கொண்டாட நாக சைத்தன்யா லண்டன் சென்றுள்ளார். தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டின் புத்தாண்டிற்கு முந்தைய தினம் இருவரும் இணைந்து நாக சைத்தன்யா குடும்பத்தினரிடம் தங்களது காதலை ஓபன் செய்து பர்மிஷன் வாங்கியுள்ளனர்.
முதல் சந்திப்பு: தொடர்ந்து சோபிதாவின் குடும்பத்தினரை சந்தித்து நாக சைத்தன்யா சம்மதம் வாங்கியுள்ளார். இப்படித்தான் இவர்கள் இருவரின் திருமணமும் நிச்சயிக்கப்பட்டு நடந்து முடிந்துள்ளது. நாக சைத்தன்யாவிற்கு சமூக வலைதளங்களில் text செய்வது பிடிக்காத காரணத்தால்தான் அவர் சோபிதாவை பார்க்க மும்பைக்கு சென்றுள்ளார். இவர்களது இந்த முதல் சந்திப்பு மிகப்பெரிய ஹோட்டலில் நடந்ததாக சோபிதா தெரிவித்துள்ளார். அவர்களின் காதல் பயணம் மிகவும் யோசிக்கப்பட்டு நடந்ததாகவும் சோபிதா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











