Naga Chaithanya: அடுத்த திருமணத்திற்கு தயாராகும் நாக சைத்தன்யா.. அப்ப அவங்க?
ஐதராபாத்: நடிகர் நாகசைத்தன்யா மற்றும் சமந்தா இருவரும் 5 ஆண்டுகள் காதலித்து கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர்.
ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளிலேயே கசந்த நிலையில் இருவரும் கூட்டாக தங்களது விவாகரத்து முடிவை வெளியிட்டனர்.
இந்த இவர்களது விவாகரத்து முடிவு குடும்பத்தினர், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தொழிலதிபர் மகளை திருமணம் செய்யவுள்ள நாக சைத்தன்யா: நடிகர் நாக சைத்தன்யா தெலுங்கில் முன்னணி ஹீரோவாக நடித்து வருபவர். கடந்த 2009ம் ஆண்டில் ஜோஸ் என்ற படத்தில் நடித்து தெலுங்கில் இவர் ஹீரோவாக அறிமுகமானார். தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணை தாண்டி வருவாயா படம் மூலம் இவர் அறிமுகமானார். தெலுங்கில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். நடிகர் நாகர்ஜூனாவின் மூத்த மகனான இவருக்கும் சமந்தாவிற்கும் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் நடித்தபோது காதல் ஏற்பட்டது.
தொடர்ந்து 5 ஆண்டுகள் காதலித்த இவர்கள் கடந்த 2017ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டு சிறப்பான ஜோடியாக வலம்வந்தனர். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளிலேயே கசந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டில் கூட்டாக விவாகரத்தை அறிவித்து ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இவர்களது பிரிவிற்கு என்ன காரணம் என்பது குறித்து இவர்கள் வெளிப்படையாக பேசவில்லை.
இதனிடையே கடந்த சில மாதங்களாக பிரபல நடிகை ஷோபிதா துலிபாலாவுடன் நாக சைத்தன்யா, காதல் வசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் இவர்கள் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமந்தாவை பிரிந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் விரைவில் நாக சைத்தன்யாவிற்கு திருமணம் செய்ய நாகர்ஜூனா ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருக்கு வீட்டில் பெண் பார்க்கப்பட்டுள்ளதாகவும் பெரிய தொழிலதிபரின் மகளை நாக சைத்தன்யா மணக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக நாகர்ஜூனா குடும்பத்தினர் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தாவை பிரிந்த பின்பு பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கிவந்த நாக சைத்தன்யா, தற்போது வீட்டில் பார்த்துள்ள பெண்ணை மணக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சமந்தா நாக சைத்தன்யாவுடனான பிரிவிற்கு பிறகு அடுத்தடுத்த படங்கள், வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்திருந்த குஷி படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப் படமாகியுள்ளது. இந்நிலையில், தன்னுடைய நோய் பாதிப்பு காரணமாக தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் சமந்தா, நடிப்பிற்கு தற்காலிகமாக முழுக்கு போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











