Custody :நிறைய பேருக்கு முத்தம் கொடுத்திருக்கிறேன்.. நாக சைத்தன்யா பகிர்ந்த விஷயம்!
ஐதராபாத் : நடிகர் நாக சைத்தன்யா தெலுங்குப்படவுலகின் முன்னணி நடிகராக உள்ளார். பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீசாகவுள்ளது.
வரும் மே 12ம் தேதி ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

முத்த காட்சிகள் குறித்து பேசிய நாக சைத்தன்யா : நடிகர் நாக சைத்தன்யா தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ள படம் கஸ்டடி. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்தப் படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்கவுள்ளார் நடிகர் நாக சைத்தன்யா. இதேபோல நடிகை கிரீத்தி ஷெட்டியும் இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வரும் மே 12ம் தேதி இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள நிலையில், ஐதராபாத்தில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மாநாடு படத்தை தொடர்ந்து கஸ்டடி படத்தை இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு. தான் இதுவரை கையில் எடுக்காத ஜானரில் இந்தப் படத்தை இயக்கி முடித்துள்ளதாக வெங்கட் பிரபு ஐதராபாத்தில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சியின்போது தெரிவித்துள்ளார். 48 மணிநேரத்தில் நடிக்கும்படியாக இந்தப் படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் படத்தில் ஹீரோவும் வில்லனும் படம் முழுவதும் இரண்டு செட் உடைகளை மட்டுமே உடுத்தி நடித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தில் 24 மணிநேரத்தில் நடைபெறுவதாக கதைக்களம் இருக்கும். அந்தப் படத்தில் ஹீரோவை சாக விடாமல் வில்லன் எஸ்ஜே சூர்யா பார்த்துக் கொள்வதாக கதைக்களம் அமைந்திநதது. அதேபோல இந்தப் படத்தில் 48 மணிநேரத்தில் வில்லன் சாகாமல் ஹீரோ பார்த்துக் கொள்வதாக கதைக்களம் அமைந்துள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். படத்தில் அரவிந்த் சாமி, சரத்குமார் உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
இதனிடையே இந்தப் படத்தில் நடித்தது குறித்து தனது பேட்டியொன்றில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள நடிகர் நாக சைத்தன்யா, கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில், தான் இதுவரை தான் நடித்துள்ள படங்களில் பல நடிகைகளுக்கு முத்தம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தான் இதையெல்லாம் கணக்கு வைத்து கொள்வதில்லை என்றும் கூறியுள்ளார். நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நாக சைத்தன்யா 4 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தார்.

இவர்கள் இருவரும் மிகவும் சறிப்பான ஜோடியாக கருதப்பட்டனர். இணைந்தே பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்நிலையில் 4 ஆண்டுகள் நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இருவரும் இணைந்து பிரிவு அறிவிப்பை வெளியிட்டனர். தற்போது இருவரும் தங்களது சினிமா கேரியரை தொடர்ந்து வருகின்றனர். சமந்தாவும் தொடர்ந்து அடுத்தடுத்த சினிமா கமிட்மெண்ட்களை ஏற்று நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











