சமந்தாவோட என்னோட ரொமான்ஸ் காட்சிகள் நல்லா இருக்கும்.. பழசை மறக்காத நாக சைத்தன்யா!
ஐதராபாத் : நடிகர் நாக சைத்தன்யா மற்றும் சமந்தா இருவரும் நீண்ட காலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமண வாழ்க்கை நீண்ட காலங்கள் நீடிக்கவில்லை. தற்போது இருவரும் விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர்.
ஆனாலும் இவர்களுக்குள்ளான நட்பு, சிறப்பான புரிதலுடன் தொடர்ந்து வருகிறது.

நடிகர் நாக சைத்தன்யா
நடிகர் நாக சைத்தன்யா, தெலுங்கில் சிறப்பான ஹீரோவாக தன்னை நிலை நிறுத்தியுள்ளார். நாகார்ஜுனாவின் மகனான இவரது அடுத்தடுத்த சிறப்பான படங்கள் இவரை ரசிகர்களிடையே தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறது. இவரது படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தாங்க்யூ படம்
தற்போது இவரது நடிப்பில் தாங்க்யூ படம் ரிலீசாக உள்ளது. இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில், தமிழ், தெலுங்கில் உருவாகவுள்ள படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு கிருத்தி ஷெட்டி நாயகியாகியுள்ளார். இதன் பூஜை சமீபத்தில் போடப்பட்டது.

பிரமோஷனில் நாக சைத்தன்யா
இதனிடையே தாங்க்யூ படத்தின் பிரமோஷன்களில் நாக சைத்தன்யா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதையொட்டிய தற்போதைய பேட்டியொன்றில், அவர் தான் காதல் காட்சிகளில் யாருடன் சிறப்பாக பொருந்துவேன் என்பது குறித்து மனம் திறந்துள்ளார். சாய் பல்லவியுடன் தன்னுடைய ரொமான்ஸ் காட்சிகள் சிறப்பாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

சமந்தாவுடன் சிறப்பான ரொமான்ஸ்
தொடர்ந்து பேசிய அவர், சமந்தாவுடன் தான் நடித்துள்ள படங்களிலும் சிறப்பான ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், சமந்தாவுடன் தன்னுடைய ரொமான்ஸ் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் இணைந்து தங்களது நான்காண்டு கால திருமண பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த நிலையில், நாக சைத்தன்யா தற்போது இவ்வாறு பேசியுள்ளார்.

திருமண வாழ்க்கை குறித்து சமந்தா
இதேபோல நேற்றைய தினம் காபி வித் கரண் நிகழ்ச்சியில் பேசிய சமந்தா, நாக சைத்தன்யாவுடனான தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். ஒத்து வராத இரண்டு மனங்கள் இணைந்து வாழ்வதால் யாருக்கு லாபம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மீண்டும் காதல் வராது
தனக்கு மீண்டும் காதல் வராது என்றும் சமந்தா குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் நாக சைத்தன்யாவுடனான பிரிவிற்கு பிறகு மீண்டும் தான் காதலிக்க விரும்பவில்லை என்று அவர் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் நாக சைத்தன்யாவுடனான காதலுக்கு பிறகு மற்றவரை காதலிக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

தாங்க்யூ படம்
நடிகர் நாக சைத்தன்யாவின் நடிப்பில் தற்போது தாங்க்யூ படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரசிகர்கள் இந்தப் படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். சிறப்பான படமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











