சமந்தாவை விவாகரத்து செய்ததற்கு இதுதான் காரணமா? ஹின்ட் கொடுத்த நடிகர் நாக சைதன்யா!
சென்னை: நடிகை சமந்தாவை விவாகரத்து செய்ததற்கான காரணம் குறித்து ஹின்ட் கொடுத்துள்ளார் நடிகர் நாக சைதன்யா.
நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துக் கொண்டனர்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி இருவரும் தங்களின் திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தனர்.

இருவரும் பிரிய காரணம்
விவாகரத்து முடிவை அறிவித்த கையோடு நடிகை சமந்தா ஆன்மிக சுற்றுலா சென்றார். நடிகர் நாக சைதன்யா, திரைப்படங்கள் ரிலீஸ், வெற்றிக் கொண்டாட்டம் என இருந்து வந்தார். இருவருமே தங்களின் விவாகரத்துக்கான காரணத்தை தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இருப்பினும் நடிகை சமந்தா, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாமல் இருந்ததாகவும் கருக்கலைப்பு செய்ததாகவும் தகவல் பரவியது. இதுவே இருவரும் பிரிய காரணம் என்றும் கூறப்பட்டது.

எவ்வளவு வலிமையானவர்
அதே நேரத்தில் சமந்தா நடித்த சில கதாப்பாத்திரங்களும் அவர்களின் திருமண பந்தம் முறிய காரணம் என கூறப்பட்டது. அண்மையில் தனது விவாகரத்து குறித்து பேசிய நடிகை சமந்தா, தான் மிகவும் பலவீனமானவர் என்று நினைத்திருந்தேன், ஆனால் எவ்வளவு வலிமையானவர் என்பதை அறிந்து ஆச்சரியப்படுகிறேன் என்றார்.

சமந்தாவை சாடிய நாக சைதன்யா
இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் நடிகை சமந்தாவை சாடியுள்ளது போல் பேசியிருக்கிறார் நாக சைதன்யா. அதாவது தனது குடும்ப உறுப்பினர்களை சங்கடப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று சமந்தா சமீபத்தில் நடித்த சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை மறைமுகமாக சாடும் வகையில் பேசியுள்ளார் நாக சைதன்யா.

சங்கடப்படுத்தும் வேடங்கள்
அந்த பேட்டியில் "எல்லா வகையான கதாபாத்திரங்களுக்கும் நான் ஏற்பேன். ஆனால், அந்த வேடங்கள் எனது குடும்பத்துக்கும், நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. எனது குடும்ப உறுப்பினர்களை சங்கடப்படுத்தும் வேடங்களில் நடிக்க மாட்டேன்.. என தெரிவித்துள்ளார். சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் பிரிந்ததாக அறிவித்ததிலிருந்து, இருவரின் பிரிவுக்குமான காரணம் என பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில் நாக சைதன்யா இதுபோன்று பேசியிருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது.
Recommended Video

ஐட்டம் பாடலுக்கு நடனம்
'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் 'தி ஃபேம்லி மேன் 2' வெப் சீரிஸ்களில் அவர் நடித்த சர்ச்சைக்குரிய கதாப்பாத்திரங்கள்தான் விவாகரத்துக்கு காரணமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகியுள்ள புஷ்பா படத்தில் நடிகை சமந்தா நடனம் ஆடியுள்ள பாடல் செம ஹிட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











