மீண்டும் அப்பாவுடன் இணைந்துள்ள நாக சைதன்யா.. வெளியளியானது பங்கர்ராஜூ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சென்னை: நடிகர் நாக சைதன்யாவின் பங்கர் ராஜூ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. நடிகர் நாகார்ஜூனாவின் மூத்த மகனான நாக சைதன்யா, அடுத்தடுத்து படங்களில் பிஸியாக உள்ளார்.

கடைசியாக அவரது நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது வசூலையும் குவித்தது.

பங்கர்ராஜூ படம்

பங்கர்ராஜூ படம்

இந்நிலையில் அக்கினேனி நாக சைதன்யா மல்டி ஸ்டாரர் படமான 'பங்கர்ராஜூ' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் ஆடம்பரமான உடையில் இருக்கும் நாக சைதன்யா, போஸ்டர் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக் டீசர்

ஃபர்ஸ்ட் லுக் டீசர்

நாக சைதன்யா நடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளதால், அது படத்தின் ஹைப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் நாக சைதன்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு 'பங்கர்ராஜூ' படத்திலிருந்து நாக சைதன்யாவைக் கொண்ட ஒரு கூல் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

அந்த டீஸர் சுவரில் தொங்கவிடப்பட்டுள்ள நாகார்ஜுனாவின் உருவப்படத்தை காட்டும் காட்சியுடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து ஸ்டைலாக நடந்து வரும் நாக சைதன்யாவின் லென்ஸ் ஷிஃப்ட், அவரது சிரிப்பு 'பங்கர்ராஜூ' திரைப்படத்தில் அவரது பர்ஃபாமன்ஸ் குறித்த எதிர்பார்பை அதிகரித்துள்ளது.

மீண்டும் அப்பாவுடன்

மீண்டும் அப்பாவுடன்

பங்கர் ராஜு படத்தில் நாக சைதன்யாவின் கூல் ரோலை பார்த்த ரசிகர்கள் சொகடே சின்னி நயனா படத்தில் நாகார்ஜூனா நடித்ததை நினைவுப்படுத்துவதாக உள்ளது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மனம் படத்திற்கு பிறகு நாகார்ஜூனாவும் நாக சைதன்யாவும் மீண்டும் இந்தப் படத்தில் ஒன்றாக நடிக்கின்றனர்.

ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்

இந்தப் படத்தில் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணனும் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டியும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை நாகார்ஜூனா ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தை கல்யாண் கிருஷ்ணா இயக்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X