பிரபல வாரிசு நடிகையுடன் லிவிங் டுகெதரில் இருந்த சமந்தாவின் முன்னாள் கணவர்? தூசு தட்டும் ரசிகர்கள்!

சென்னை: நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜூனாவின் மூத்த மகன் நாக சைதன்யா. தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார்.

நடிகர் நாக சைதன்யா, தன்னுடன் சில படங்களில் இணைந்து நடித்த நடிகை சமந்தாவை காதலித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

பிரிவாதாக அறிவிப்பு

பிரிவாதாக அறிவிப்பு

திருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவர் படங்களில் பிஸியாக இருந்து வந்தனர். திருமணத்திற்கு பிறகுதான் நடிகை சமந்தாவின் சினிமா கிராஃப் உயரத் தொடங்கியது. அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிவதாக அறிவித்தனர்.

சமந்தா குறித்து பரவிய தகவல்

சமந்தா குறித்து பரவிய தகவல்

சமூக வலைதள பக்கத்தில் ஒரே மாதிரியான அறிவிப்பை அவர்கள் வெளியிட்டனர். அவர்களின் பிரிவு ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து நடிகை சமந்தாவுக்கு வேறு ஒரு நபருடன் இருந்த தவறான தொடர்புதான் அவர்களின் திருமண முறிவுக்கு காரணம் என்றும், அவர் கருக்கலைப்பு செய்ததுதான் காரணம் என்றும் கூறப்பட்டது.

ஆதரவு தெரிவிக்கவில்லை

ஆதரவு தெரிவிக்கவில்லை

இதனால் மனமுடைந்த சமந்தா, இதுபோன்ற தவறான தகவல்கள் தன்னை காயப்படுத்துவதாக கூறினார். அந்த நேரத்தில் கூட முன்னாள் கணவர் என்ற முறையில் நாக சைதன்யாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ சமந்தாவுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை. தனி நபராக தன் மீதான பழி சொற்களை சந்தித்து வருகிறார் சமந்தா.

திருமணத்திற்கு முன்பு லிவிங் டுகெதர்

திருமணத்திற்கு முன்பு லிவிங் டுகெதர்

அதேநேரத்தில் நடிகர் நாக சைதன்யாவுக்கு சில நடிகைகளுடன் ஏற்பட்ட நெருக்கமே அவர்களின் திருமண முறிவுக்கு காரணம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா பிரபல வாரிசு நடிகையுடன் லிவிங் டுகெதரில் இருந்ததும், சமந்தாவை காதலித்த போதே அவரையும் காதலித்ததாகவும் தகவல் பரவி வருகிறது.

பிரேமம் ரீமேக்கின் போது

பிரேமம் ரீமேக்கின் போது

அதாவது நாக சைதன்யா, சமந்தாவை திருமணம் செய்வதற்கு முன்பு நடிகை ஸ்ருதி ஹாசனுடன் லிவிங் டுகெதரில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் பிரேமம் ரீமேக் படத்தில் நடித்த போது ஒன்றாக ஊர் சுற்றிய போட்டோக்களும் இணையத்தில் கசிந்து வைரலானது.

பிறந்த நாளுக்கு வாழ்த்து

பிறந்த நாளுக்கு வாழ்த்து

இந்நிலையில் நடிகை சமந்தாவையும் நடிகை ஸ்ருதி ஹாசனையும் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் தெரியாமல் நாக சைதன்யா காதலித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு நாக சைதன்யாவின் பிறந்த நாளுக்கு ஸ்ருதி ஹாசனும் சமந்தாவும் வாழ்த்து கூறியதும், அவர்களுக்கு நாக சைதன்யா பதில் கூறியதும் தற்போது வைரலாகி வருகிறது.

Recommended Video

பெண்களுக்கு கல்யாணம் முடியவில்லை | Samantha கொடுத்த Strong Advice
பூஜா ஹெக்டேவுடன் கிசுகிசு

பூஜா ஹெக்டேவுடன் கிசுகிசு

பின்னர் சில காரணங்களுக்காக ஸ்ருதி ஹாசனை பிரிந்த நாக சைதன்யா, சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை சமந்தாவையும் பிரிந்துள்ளார் நடிகர் நாக சைதன்யா. ஏற்கனவே நடிகர் நாக சைதன்யா, நடிகை பூஜா ஹெக்டேவுடன் கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X